முட்டாள்தனமான ஸ்டேட்மன்ட்.. நேதன் லயனுக்கு அஸ்வின் பதிலடி கொடுக்கனும்.. பசித் அலி அதிருப்தி

basit ali
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மோத உள்ளன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. அந்த தொடரில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இப்போதே ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

ஏனெனில் கடைசியாக நடைபெற்ற 2 தொடர்களிலும் வலுவான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா சரித்திர சாதனை படைத்தது. எனவே அதற்கு பதிலடி கொடுத்து 2014க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் களத்தில் ஸ்லெட்ஜிங் செய்வதற்கு நிகராக களத்திற்கு வெளியே மனதளவிலும் மோதுவதில் வல்லவர்கள்.

- Advertisement -

முட்டாள்தனமான கருத்து:

அந்த வேலையை தொடர் துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே ஆஸ்திரேலியர்கள் துவங்கி விட்டனர் என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை இம்முறை 4 -1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதே போல 10 வருடங்கள் கழித்து இந்தியாவை வீழ்த்த இப்போதே தயாராகி வருவதாக கேப்டன் பட் கமின்ஸ் கூறினார்.

அதன் உச்சமாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நேதன் லயன் இம்முறை 5 – 0 (5) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று நேற்று முன்தினம் சவாலான கணிப்பை வெளியிட்டார். இந்நிலையில் தங்களைப் போன்ற முன்னாள் வீரர்கள் கணிப்புகளை வெளியிடுவதில் நியாயம் இருக்கிறது என்று பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஆனால் தற்போது விளையாடி வரும் நேதன் லயன் தெரிவித்துள்ள இந்த கணிப்பு முட்டாள்தனமானது என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் பதிலடி கொடுக்கனும்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நேதன் லயனின் முட்டாள்தனமான கருத்துக்கு ஆஸ்திரேலியா 6 – 0 (5) என்ற கணக்கில் இந்தியாவை வெல்லும் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே நான் சொல்வேன். ஆனால் அது வார்த்தைகளில் மட்டுமே இருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் கடந்த 2 தொடர்களில் இந்தியா டாமினேட் செய்துள்ளது”

இதையும் படிங்க: 34/3 என இந்தியா போராட்டம்.. வங்கதேசத்திடம் பெட்டிப்பாம்பாக அடங்கும் ரோஹித்.. பரிதாப புள்ளிவிவரம்

“எனவே இது போன்ற கருத்துக்கள் தற்போதைய கிரிக்கெட்டர்களுக்கு பொருந்தாது. ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்கள் வேண்டுமானால் இது போன்ற கருத்துக்களை வெளியிடலாம். இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவை 5 – 0 என்ற கணக்கில் இந்தியா தோற்கடிக்கும் என்று அஸ்வின் அவருக்கு பதில் கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement