டி20 உ.கோப்பையை வெல்ல ரிஷப் பண்ட்டை இந்தியாவிலேயே விட்டு செல்ல வேண்டும் – முன்னாள் வீரர் அதிரடி கருத்து

Rishabh Pant
Advertisement

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளது இரு முனை விவாதங்களை எழுப்பியுள்ளது. ஒன்று உலகக் கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு பொருந்தக்கூடிய சஞ்சு சாம்சன் காலம் காலமாக வாய்ப்புக்காக ஏங்கி இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருந்தும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட சேர்க்கப்படவில்லை. ஆனால் அறிமுகமானது முதல் இப்போது வரை 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளில் விளையாடி சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட தொடர்ந்து சொதப்பலாக செயல்பட்டும் ரிஷப் பண்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Rishabh Pant Sanju Samson

மற்றொன்று தோனிக்கு பின் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக உருவாக்க வேண்டும் என்பதற்காக சுமாராக செயல்பட்டாலும் கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு என அனைவரும் சேர்ந்து மொத்தமாக அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே வருகின்றனர். அந்த ஆதரவையும் நம்பிக்கையும் 37 வயதிலும் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் மீது கேப்டன் உட்பட யாருமே முழுமையாக வைக்காதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் சமீபத்திய ஆசிய கோப்பையில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்திருந்த போது லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா அவரை கழற்றிவிட்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பளித்த சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

சரியான கருத்து:
அத்துடன் ஆசிய கோப்பையில் தோல்வியடைந்த போட்டிகளில் இந்தியா குறைவாக எடுத்த 15 – 20 ரன்களை அடிக்கக்கூடியவர் என தெரிந்தும் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது என ஸ்ரீகாந்த், கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்து ரிஷப் பண்ட்க்கு ஆதரவளித்து வருகிறார்கள். இந்த ஆதரவுகளுடன் ஜடேஜா காயத்தால் விலகியதும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமாக இருப்பதும் ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கான வாய்ப்பை 90% உறுதிப்படுத்தியுள்ளது.

DK and Pant

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் ரிஷப் பண்ட்டை இந்தியாவிலேயே விட்டு விட்டு செல்ல வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் வெளிப்படையாக பேசியுள்ளார். ஏற்கனவே ராகுலுடன் தொடக்க வீரராக ரிஷப் பண்ட் களமிறங்கினால் வெற்றிகரமாக செயல்படுவார் என்று தெரிவித்திருந்த அவர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அதற்கான வாய்ப்பு இல்லாததால் இந்தியாவுக்காக மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் இதுவரை சிறப்பாக செயல்படாத அவரை கழற்றி விடுவது தான் சிறந்த முடிவென்று கூறியுள்ளார்.

- Advertisement -

மொஹாலியில் நடைபெறும் முதல் ஆஸ்திரேலிய டி20 போட்டிக்கான தன்னுடைய 11 பேர் அணியில் ஏற்கனவே அவருக்கு வாய்ப்பளிக்காத வாசிம் ஜாபர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது. “சமீப காலங்களில் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர் மீது ஏன் இந்தியா நம்பிக்கை தயங்குகிறது என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர் பேட்டிங்கில் சில போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். மேலும் உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்டை விளையாடலாமா வேண்டாமா என்பது பற்றி இந்தியா தெளிவாக முடிவெடுக்க வேண்டும்”

Jaffer

“என்னை கேட்டால் இந்த விஷயத்தில் நாம் அனைவரும் தேவையில்லாமல் அதிகப்படியாக நினைக்கிறோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் போட்டியை தலைகீழாக மாற்றி தொடரை வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டுள்ளார். ஆனால் ஐபிஎல் உட்பட அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் இது வரை அவ்வாறு செயல்படவில்லை. எனவே ரிஷப் பண்ட் டாப் 6 இடத்திற்குள் விளையாட சரியானவரா அல்லது ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்பதை இந்தியா கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க: IND vs AUS : யாரும் எதிர்பார்க்காத வீரரை அணிக்குள் கொண்டு வந்த ரோஹித் சர்மா – பிளேயிங் லெவன் இதோ

“இருப்பினும் என்னைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் 4 அல்லது 5ஆவது இடத்தில் விளையாட பொருந்த மாட்டார். ஆனால் ஓப்பனிங்கில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றாலும் தற்சமயத்தில் அது நடக்கப் போவதில்லை. எனவே உலக கோப்பைக்கு ரிஷப் பண்ட்டை விட்டு விட்டுச் செல்வதே சிறந்த முடிவாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்” என கூறினார்.

Advertisement