IND vs AUS : யாரும் எதிர்பார்க்காத வீரரை அணிக்குள் கொண்டு வந்த ரோஹித் சர்மா – பிளேயிங் லெவன் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது செப்டம்பர் 20-ஆம் தேதி இன்று மொஹாலி மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் அடைந்த தோல்வியிலிருந்து வெளியே வரும் முனைப்பில் தயாராகி வரும் இந்திய அணிக்கு இந்த வெற்றி முக்கியமான ஒன்றாக அமைய உள்ளது.

INDvsAUS

- Advertisement -

அதேவேளையில் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கு தொடருக்கு முன்பாக இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்ற அமைப்பில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதோடு ஆசியக் கோப்பை அணியில் காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இந்நிலையில் சற்று முன்னர் போடப்பட்ட டாஸிற்கு பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் :

Umesh-Yadav

இந்த போட்டியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் விளையாடவில்லை என்று அறிவித்தார். அதே வேளையில் பும்ராவிற்கு பதிலாக மாற்றுவீரராக யார் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உமேஷ் யாதவ் இந்த போட்டியில் விளையாடுகிறார் என்று அறிவித்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஓய்வு பெறாமல் அடம் பிடித்த கபில் தேவ் – பெருமையுடன் ஓய்வு பெற வைத்த பின்னியை பகிரும் முன்னாள் வீரர்

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) புவனேஷ்வர் குமார், 9) உமேஷ் யாதவ், 10) ஹர்ஷல் படேல், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement