இதே இலங்கைக்கு எதிரா அதை செஞ்ச.. ரோஹித்தை பாத்து கத்துக்கோங்க.. மேத்யூஸ் விவகாரத்தில் ஷாகிப்பை விளாசிய கைஃப்

Mohammad Kaif
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 7ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தில் தோற்கடித்தது. இருப்பினும் போட்டியில் நட்சத்திர இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 143 வருட சர்வதேச கிரிக்கெட்டில் கால தாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்றும் பரிதாபமான சாதனை படைத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது அப்போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த அவர் கடைசி நேரத்தில் தம்முடைய ஹெல்மெட் பழுதாகியிருந்ததை பார்த்தார். அதனால் வேறு ஹெல்மட்டை அவர் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்த போது வங்கதேசம் அணியினர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக புகார் கொடுத்து அவுட் கொடுக்குமாறு நடுவர்களிடம் கேட்டனர்.

- Advertisement -

ரோஹித்தை பாருங்க:
அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அதற்கடுத்த பேட்ஸ்மேன் அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர்கொள்ளவில்லை என்ற விதிமுறையை மேத்யூஸ் மீறியதால் அவுட் கொடுத்தார்கள். அப்போது நிலைமையை மேத்யூஸ் எடுத்துரைத்தும் சாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியினர் அவுட்டை வாபஸ் பெறாமல் மனசாட்சியின்றி நடந்து கொண்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

இறுதியில் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொள்ளாததும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஷாகிப் மீது வைத்திருந்த மரியாதை போய்விட்டதாக போட்டியின் முடிவில் தெரிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ் வெற்றிக்காக வங்கதேசம் இந்தளவுக்கு இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் இது மன்கட் போன்ற செயலை விட மிகவும் அவமானமானது என்று தெரிவித்த அவர் தாம் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வந்த வீடியோ ஆதாரம் இருப்பதாக கோபத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் ரோஹித் சர்மாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என முகமது கைப் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் முகமது ஷமி மன்கட் முறையில் இலங்கை கேப்டன் ஷனகா சதமடிக்க கூடாது என்ற நோக்கத்துடன் அவுட் செய்தார். அப்போது நடுவர் அவுட் கொடுத்தும் இப்படி வெற்றி பெற விரும்பவில்லை என்று தெரிவித்த கேப்டன் ரோஹித் சர்மா அதை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த வேர்லடுகப்ல விராட் கோலி ஆடுறத உங்கள தவிர யாரும் விரும்பமாட்டாங்க – பாண்டிங் அளித்த கருத்து

இந்த நிகழ்வு பற்றி முகமது கைஃப் 2023 ஜனவரி 11ஆம் தேதி பதிவிட்டது பின்வருமாறு. “அவுட்டை வாபஸ் பெற்றது ரோஹித் சர்மாவின் தலைமை பண்பை காட்டுகிறது. அவர் வெற்றியை விரும்புகிறார். ஆனால் எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்பதை அவர் விரும்பவில்லை. இந்த இடத்தில் சரி – தவறு என்பதை தாண்டி உங்களுடைய மனம் என்ன சொல்கிறது என்பது முக்கியம்” என்று பதிவிட்டிருந்தார். தற்போது அதை ரீட்வீட் செய்துள்ள கைஃப் வங்கதேச கேப்டன் இதை பின்பற்றியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement