அதை இந்தியாவை பாத்து கத்துக்கோங்க.. பாகிஸ்தான் அணிக்கு ஓப்பனாக அட்வைஸ் செய்த சோயப் மாலிக்

Shoaib Malik 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. இத்தனைக்கும் நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக வென்று நல்ல துவக்கத்தை பெற்ற அந்த அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது.

அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய அந்த அணி ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்து கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தது. அதன் பின் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்தை தோற்கடித்தாலும் மோசமான ரன்ரேட் காரணமாக அந்த அணி செமி ஃபைனல் வாய்ப்பை கோட்டை விட்டு ஏமாற்றங்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

- Advertisement -

இந்தியாவை பாருங்க:
இந்நிலையில் மோசமான தோல்விகளை சந்தித்து வெளியேறிய பாகிஸ்தான் வரும் காலங்களில் எப்படி முன்னேற வேண்டும் என்பதை இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் போன்ற அனைத்து துறைகளிலுமே அசத்தும் இந்தியா ஒரு திட்டம் தவறிப்போனால் மற்றொரு திட்டத்தை பின்பற்றி வெற்றி பெறுவதை பாருங்கள் என பாகிஸ்தானை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக்கோப்பையில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் பூர்த்தி அடைந்துள்ளது. அதாவது நான் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளை பற்றி மட்டும் பேசவில்லை. இந்திய அணியில் சில காயங்கள் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அதை சமாளிக்க 2வது திட்டத்தை வைத்திருக்கிறார்கள்”

- Advertisement -

“அதைப் பின்பற்றி அவர்கள் முன்னோக்கி நகர்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமாகும். மேலும் ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டுக்கும் தேவையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரிக்கு சமமான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. அப்போது தான் நாட்டுக்காக விளையாடும் போது வாய்ப்பு கிடைத்தால் அசத்த தயாராக இருக்க முடியும். நாமும் இது போன்ற மறு சீரமைப்பு பணிகளை நோக்கி செல்கிறோம்”

இதையும் படிங்க: கண்டிப்பா அவர் அழுதுருப்பாரு.. அதை செஞ்சுருந்தா ஈஸியா மேக்ஸ்வெலை காலி பண்ணிருக்கலாம்.. கங்குலி கருத்து

“ஆனால் நாம் நம்முடைய முடிவுகளில் உறுதியாக இருப்பதில்லை. நம்முடைய முடிவுகளை பின்பற்றி தொடர்ச்சியாக வேலை செய்வதில்லை” என்று கூறினார். இந்த நிலைமையில் உலகக்கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தேர்வுக்குழு தலைவர் இன்சமாம்-உல்-ஹக் தொடர் தோல்விகளால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதே போலவே விரைவில் பாகிஸ்தான் அணியிலும் நிறைய அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement