கண்டிப்பா அவர் அழுதுருப்பாரு.. அதை செஞ்சுருந்தா ஈஸியா மேக்ஸ்வெலை காலி பண்ணிருக்கலாம்.. கங்குலி கருத்து

AFG Ganguly
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிகெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டியில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி இத்தொடரின் துவக்கத்திலேயே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்து பாராட்டுகளை பெற்றது.

அதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற போட்டியில் 1992 சாம்பியன் பாகிஸ்தானை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து சரித்திரம் படைத்த அந்த அணி 1996 உலக சாம்பியன் இலங்கையையும் வீழ்த்தியது. அந்த வகையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 2023 உலகக் கோப்பையில் 2வது சிறந்த ஆசிய அணியாக அசத்திய ஆப்கானிஸ்தான் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டதே செமி ஃபைனல் வாய்ப்பை பறித்தது.

- Advertisement -

கங்குலி கருத்து:
குறிப்பாக அந்த போட்டியில் 292 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை ஆரம்பத்திலேயே 91/7 என மடக்கி பிடித்தது. ஆனால் அப்போது கொடுத்த கேட்ச்சை முஜீப் தவற விட்டதை பயன்படுத்திய மேக்ஸ்வெல் அடித்த நொறுக்கி 201* (128) ரன்கள் விளாசி ஆப்கானிஸ்தானின் வெற்றியை பறித்தார்.

அதை விட காயத்தை சந்தித்தால் கால்கள் சரியாக வேலை செய்யாத போதிலும் அவர் கைகளாலேயே எளிதாக சிக்ஸர்கள் அடிக்கும் அளவுக்கு அதன் பின் சுமாராக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வெற்றியை தாரை வார்த்தனர். இந்நிலையில் மேக்ஸ்வெல் காயத்தால் சரியாக நகர்ந்து விளையாட முடியாமல் தடுமாறுகிறார் என்பதை தெரிந்தும் ஆப்கானிஸ்தான் பவுலர்கள் ஸ்டம்ப்களுக்கு வெளியே பந்து வீசாமல் தவறு செய்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த சமயத்தில் 7வது ஸ்டம்ப் பகுதியில் ஒயிட் போன்ற பந்துகளை வீசியிருந்தால் எளிதாக மேக்ஸ்வெலை அவுட்டாக்கியிருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இதை பார்த்து ஆப்கானிஸ்தானின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா அழுதிருப்பார் என்றும் கூறியுள்ளது பின்வருமாறு. “மேக்ஸ்வெலுக்கு ஆப்கானிஸ்தான் அதிகமாக நேராக வீசினார்கள். அந்த சூழ்நிலையில் 7வது ஸ்டம்ப் பகுதிகளில் வீசியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: அதை நெனச்சு பயப்படாதீங்க.. 2023 உ.கோ வெல்ல இந்திய அணிக்கு ரிச்சர்ட்ஸ் கொடுத்த முக்கிய அட்வைஸ்

“ஏனெனில் காயத்தை சந்தித்திருந்த அவரால் கால்களை எளிதாக நகர்த்தி பந்தை தொட முடியாது. அதற்காக அஜய் ஜடேஜா கண்டிப்பாக அழுதிருப்பார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணியினர் மேக்ஸ்வெல் கால்களிலேயே பந்துகளை போட்டுக் கொடுத்தனர். அவர்கள் ஒய்ட் பந்துகளை வீச முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் ஆப்கானிஸ்தான் அவரிடமிருந்து எதையும் எடுக்க விரும்பவில்லை. அதனால் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement