அந்த துறையில் இந்தியாவுக்கு கோச்சிங் கொடுக்க தயார்னு சொல்லியும் டிராவிட் வேணாம்னு சொல்லிட்டாரு – சிவராமகிருஷ்ணன்

Laxman Sivaramakrishnan
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த இந்தியா 2019க்குப்பின் முதல் முறையாக 4 வருடங்கள் கழித்து ஒரு தொடரை இழந்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் கோட்டை விட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் இந்திய இப்படி மோசமாக செயல்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. முன்னதாக வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சென்னையில் நடைபெற்ற 3வது போட்டியில் 270 ரன்களை துரத்திய இந்தியா விராட் கோலியின் அரை சதத்தால் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் தருவாயில் இருந்தது.

ஆனால் முக்கிய நேரத்தில் சுழல் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட ஆடம் ஜாம்பா குறைந்த ரன்களை மட்டும் கொடுத்து ஹர்டிக் பாண்டியா 40, ரவீந்திர ஜடேஜா 18 என முக்கிய வீரர்களை பினிஷிங் செய்ய விடாமல் காலி செய்து மொத்தம் 4 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் வென்றார். இருப்பினும் அதற்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்ஷிப் முக்கிய பங்காற்றியது என்றே சொல்லலாம்.

- Advertisement -

மறுத்த டிராவிட்:
பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 3வது போட்டியில் வெற்றி பெறுவதற்கு அபாரமாக கேப்டன்ஷிப் செய்து முக்கிய பங்காற்றிய அவர் இந்த போட்டியில் ஆடம் ஜாம்பா பந்து வீசும் தருணங்களில் 7 வீரர்களில் 3 பேரை சைட் திசையில் கச்சிதமாக நிறுத்தி கேட்ச் பிடிப்பதற்கான ஃபீல்டிங் செட்டப்பை சிறப்பாக செய்தார். ஆனால் இந்தியா ஃபீல்டிங் செய்த போது 3 விக்கெட்டுகளை சாய்த்த குல்தீப் யாதவுக்கு அதே வலது கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்கையில் கேப்டன் ரோகித் சர்மா அட்டாக் செய்யும் ஃபீல்டிங்கை அமைத்துக் கொடுக்கவில்லை. இதை ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் சுட்டிக்காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கு “ராகுல் டிராவிட்டுக்கு உதவி செய்ய என்னுடைய விருப்பத்தை நான் தெரிவித்தேன். ஆனால் நான் அவருக்கு அதிக வயதுடைய சீனியராக இருப்பதால் அவருக்கு கீழ் சுழல் பந்து வீச்சாளர்களுடன் இணைந்து துணை பயிற்சியாளராக பணியாற்ற விரும்பவில்லை என்று கூறிவிட்டார்” என பதிலளித்தார். அதாவது அது போன்ற நுணுக்கமான தருணங்களை கற்றுக் கொடுப்பதற்காக இந்திய அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட விரும்பியதை நேரடியாகவே ராகுல் டிராவிட்டிடம் சொன்னதாக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் தம்மை விட அதிக வயதுடையவர் என்ற காரணத்தால் அதற்கு ராகுல் டிராவிட் மறுப்பு தெரிவித்து விட்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது 57 வயதாகும் சிவராமகிருஷ்ணன் இந்தியாவுக்காக கடந்த 1983 முதல் 1987 வரையிலான காலகட்டங்களில் 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்களை எடுத்தார். குறிப்பாக உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 154 விக்கெட்டுகளை எடுத்த அவர் அந்த சமயத்தில் இந்திய அளவில் மிகச்சிறந்த ஸ்பின்னராக இருந்தார்.

அதனால் 2001 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் சென்னையில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டிக்கு முன் அவரை விரும்பி அழைத்த சச்சின் டெண்டுல்கர் தமக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுமாறு கேட்டுக் கொண்டார். அந்த பயிற்சிகளால் சென்னையில் நடைபெற்ற 3வது போட்டியில் ஷேன் வார்னேவை சச்சின் டெண்டுல்கர் இறங்கி இறங்கி அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை ரசிகர்களால் மறக்க முடியாது.

இதையும் படிங்க:சூரியகுமார் யாதவ் மீண்டும் பார்முக்கு வரனும்னா இதை பண்ணுங்க – சல்மான் பட் யோசனை

அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் நல்ல மதிப்புடைய அவர் மூத்தவராக இருப்பதால் தமுக்கு கீழ் துணை பயிற்சியாளராக செயல்படுவதை விரும்பாத காரணத்தால் ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். அந்த நிலையில் தற்போது ராகுல் டிராவிட் தலைமையில் பந்து வீச்சு பயிற்சியாளர் பாராஸ் மாம்ப்ரேவின் கீழ் சைராஜ் பகதுளே இந்திய அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement