ஐபிஎல் 2024 : மீண்டும் மும்பை அணிக்குள் வந்த மலிங்கா.. அதிகாரபூர்வ அறிவிப்பால் பல்தான்ஸ் மகிழ்ச்சி

Lasith Malinga
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 தொடரில் எம்எஸ் தோனி தலைமைக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. மறுபுறம் 6வது கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

இருப்பினும் தோல்வி பாடங்களுடன் 2024 சீசனில் கோப்பையை வெல்வதற்கான வேலைகளை இப்போதே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் துவக்கியுள்ளது. அதாவது அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்து வந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட் தற்போது அந்த பதவியிலிருந்து விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

பல்தான்ஸ் மகிழ்ச்சி:
அவருக்கு பதிலாக தற்போது இலங்கையைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் ஜாம்பவான் வீரர் லசித் மலிங்கா புதிய பவுலிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகவும் வித்தியாசமான ஸ்லிங்கா பந்துகளை வீசி உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்த மலிங்கா கடந்த 2009 – 2019 வரை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

அதில் 122 போட்டிகளில் 170 விக்கெட்களை எடுத்த அவர் 2019ல் ஓய்வு பெறும் போது ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்திருந்தார். அந்த வகையில் மும்பை அணியின் பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் 2019 ஃபைனலில் பரம எதிரி சென்னைக்கு எதிராக கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் பெற்றுக் கொடுத்த மாஸ் வெற்றியை மறக்கவே முடியாது.

- Advertisement -

இருப்பினும் அதன் பின் ஓய்வு பெற்ற அவர் கடந்த சில வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங் பயிற்சியாராக செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது ஷேன் பாண்ட் பதவி விலகியதை தொடர்ந்து ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறியுள்ள மலிங்கா மும்பை அணியின் பயிற்சியாளராக புதிய பொறுப்பேற்றுள்ளது அந்த அணியின் ரசிகர்களான பல்தான்ஸை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: பாண்டியா இல்லையென்றால் இவருக்கு தான் வாய்ப்பு. ரசிகர்களே முடிவு பண்ணிட்டாங்க – விவரம் இதோ

அந்த தலையில் தான் நீண்ட காலமாக விளையாடிய மும்பை அணியில் மீண்டும் இணைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை கொடுப்பதாக மலிங்கா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கைரன் பொல்லார்ட், மார்க் பவுச்சர் ஆகிய பயிற்சியாளர் குழுவில் இணைந்து கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சிகளை மும்பை அணிக்கு மலிங்கா வழங்க உள்ளார். அதனால் 2020க்குப்பின் மீண்டும் மும்பை கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் இப்போதே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement