சயீத் அஜ்மல் போல.. தமிழனாக அஸ்வின் அடி மடியில் கைவைக்கும் சிவராமகிருஷ்ணன் – ரசிகர்கள் கோபமான அதிருப்தி

lakshman sivaramakrishnan 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நேரத்தில் தேர்வாகியுள்ளார். சொல்லப்போனால் 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால் அவரின் இந்த வாய்ப்பு கடந்த மாதம் வரை அசாத்தியமாகவே இருந்தது.

இருப்பினும் கடைசி நேரத்தில் அச்சர் படேல் காயமடைந்ததால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பதற்காக சர்வதேச அரங்கில் 712 விக்கெட்களையும் 2011 உலகக்கோப்பை வெற்றிகளில் பங்காற்றிய அனுபவத்தையும் கொண்டிருப்பதால் அஸ்வினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு சில எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் வீரர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக மோசமான விமர்சனங்களை வைத்து வருவது தமிழக ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

- Advertisement -

தமிழனுக்கு தமிழன்:
முதலில் உலகக்கோப்பை வர்ணனையாளர்கள் பட்டியல் பற்றி விமர்சித்த அவரிடம் ஒரு ரசிகர் அஸ்வின் பெயரை சுட்டி காட்டினார். அப்போது உடனடியாக கொந்தளித்த அவர் அஸ்வின் அதிக விக்கெட்களை எடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்படுவதாக விமர்சித்தார். மேலும் அது போன்ற மைதானங்களில் முட்டாள் கூட விக்கெட்டுகளை எடுப்பார் என்று தெரிவித்த அவர் சந்தேகமானால் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அஸ்வின் புள்ளி விவரங்களை புரட்டிப் பாருங்கள் என்று பேசினார்.

அத்துடன் தோனி மற்றும் சிஎஸ்கே இல்லாமல் போனால் ஹர்பஜன் இருந்ததால் இந்திய அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது என்று தெரிவித்த அவர் அஸ்வின் சாதனைக்காக விளையாடக்கூடிய சுயநலவாதி என்று மோசமாக பேசினார். மொத்தத்தில் 20 – 30 பதிவுகளை ட்விட்டரில் போட்டு தாறுமாறாக முகம் சுளிக்கும் அளவுக்கு விமர்சித்த அவர் இறுதியில் அஸ்வின் தமக்கு போன் செய்து ஏற்கனவே தாம் சொன்னது போல் பவுலிங் ஆக்‌ஷனில் செய்ய வேண்டிய மாற்றத்தை பற்றி கேட்டதாக பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

அதனால் அனைத்ததும் முடிந்தது என்று ரசிகர்கள் நினைத்த நிலையில் சமீபத்தில் என்சிஏவில் அஸ்வின் பவுலிங் பயிற்சிகளை செய்யும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் அஸ்வினை பின்புறமாக இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்போது மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இந்த பவுலிங் ஆக்சன் இயந்திரத்தனமாக சரியானது என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா? இதைப் பற்றி தான் நான் பேசுகிறேன்” என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதையும் படிங்க: 2019இல் ஏமாத்திடீங்க.. இம்முறை அதை செஞ்சா உங்கள தோளில் தூக்க ரெடி – கோலிக்கு சேவாக் கோரிக்கை

அதாவது விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அஸ்வின் பந்து வீசுகிறாரா? என்று சிவராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதற்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்த சயீத் அஜ்மல் தான் அஸ்வின் விதிமுறைக்கு எதிராக பந்து வீசுவதாக பலமுறை விமர்சித்து பார்த்துள்ளோம். ஆனால் தற்போது ஒரு தமிழனுக்கு தமிழனே அடி மடியில் கைவைப்பது போல் அவர் அஸ்வினை இப்படி எல்லை மீறி பேசுவதாக தமிழக ரசிகர்கள் அதிருப்தியில் வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement