செலக்சன் சிஸ்டமே தப்பு, நட்சத்திர அடிப்படையில் இந்திய அணி தேர்வு செய்யப்படுவதற்கு அவர் எடுத்துகாட்டு – சிவராமகிருஷ்ணன்

L Sivaramakrishnan
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி 2 போட்டிகளில் சொதப்பிய இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2019க்குப்பின் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் ஆஸ்திரேலியாவிடம் தாரை வார்த்தது. முன்னதாக சமீப காலங்களாகவே இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் தகுதி மற்றும் திறமை அல்லது வடிவத்திற்கு ஏற்றார் போல் தேர்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் அதிகமாக வைக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக கேஎல் ராகுல் தரமான வீரர் என்றாலும் கடந்த ஒரு வருடமாக சுமாரான ஃபார்மில் இருந்தும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. மறுபுறம் 2015 முதல் நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று கடந்த வருடம் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து கழற்றி விடப்பட்டு வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. அத்துடன் வெவ்வேறு வகையான கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்களை தனித்தனியே தேர்வு செய்வதே ஒரே சமயத்தில் 50 ஓவர் (2019) – 20 ஓவர் (2022) உலகக் கோப்பைகளை வென்று இங்கிலாந்து உலக சாம்பியனாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சிஸ்டமே தப்பு:
ஆனால் இந்திய அணியில் சூர்யாகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சரமாரியாக அடித்து நொறுக்கி குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சுமாராகவே செயல்பட்டார். அதை விட சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறும் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் 24.05 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்து வருவதுடன் ஆஸ்திரேலிய தொடரில் 3 போட்டிகளிலும் தொடர்ந்து கோல்டன் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனை படைத்தார்.

இதிலிருந்து விராட் கோலி போன்ற ஒரு சிலரை தவிர்த்து அனைவராலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்பட முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் சில வீரர்கள் நட்சத்திர அந்தஸ்துக்காக தேர்வு செய்யப்படுவதற்கு சூரியகுமார் சிறந்த எடுத்துக்காட்டு என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் அசத்துகிறார் என்பதற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் தேர்வு செய்யாதீர்கள் என்று தேர்வுக்குழுவை கடுமையாக சாடியுள்ளார்.

- Advertisement -

மேலும் குறிப்பிட்ட வகையான கிரிக்கெட்டில் அசத்தும் குறிப்பிட்ட வீரர்களை சரியாக கண்டறிந்து தேர்வு செய்யாத இந்திய அணியின் அடிப்படைத் தேர்வும் சுமாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியது பின்வருமாறு. “சில வீரர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவும் பாதுகாப்பும் கிடைப்பதற்கு சூரியகுமார் யாதவ் சிறந்த எடுத்துக்காட்டு. டி20 கிரிக்கெட் 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. மேலும் சிவப்பு பந்து மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட் என்று பிரிக்க வேண்டாம். இருப்பினும் சூரியகுமார் டெஸ்ட் அணியில் ஒரு பகுதியாக இருந்தார்”

“டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை வைத்து ஒரு வீரரை நீங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தேர்வு செய்ய முடியாது. அதற்கு புதுமையாக செயல்படுவதற்கான திறமை அவசியமாகும். ஆனால் அதே வழியில் தான் நீங்கள் விளையாடினால் பின்னர் 50 ஓவர் அல்லது டெஸ்ட் போட்டிகள் போன்ற பெரிய வடிவிலான கிரிக்கெட்டில் சற்று தடுமாறக்கூடும்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவரது கருத்துக்கு நிறைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் “இப்போதைய இந்திய அணியை ஐபிஎல் தொடரை மையப்படுத்தி தேர்வுக்குழு தேர்வு செய்வது மோசமானது” என்று ஒரு ரசிகர் பதிவிட்டிருந்தார். அதற்கு லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆம் என்று பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:நீங்க பணக்காரராக இருக்கலாம் ஆனா நண்பணான நாங்க எதுக்கும் சலச்சவங்க இல்ல – இந்தியாவுக்கு அப்ரிடி அறிவுரை

அத்துடன் ஒரு தொடரை வைத்து சூரியகுமாரை மதிப்பிட வேண்டாம் என்று ஒரு ரசிகர் பதிலடி கொடுத்தார். அதற்கு இதற்கு முன்பிருந்தே இதை தெரிவித்து வருவதாக பதிலளித்த சிவராமகிருஷ்ணன் சூரியகுமார் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் கிடையாது என்று மீண்டும் கூறினார்.

Advertisement