நீங்க பணக்காரராக இருக்கலாம் ஆனா நண்பணான நாங்க எதுக்கும் சலச்சவங்க இல்ல – இந்தியாவுக்கு அப்ரிடி அறிவுரை

- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுப்போம் என்றும் அறிவித்தார். ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் எங்களது நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அறிவித்துள்ளது.

Jay Shah IND vs PAk

அப்போது முதலே கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் இருநாட்டுக்குமிடையே அனல் பறந்து வரும் நிலையில் பாகிஸ்தான் என்ன பேசினாலும் ஐசிசி மற்றும் ஆசிய கவுன்சிலுக்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் இந்தியாவை எதுவும் செய்ய முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா எடுப்பதே இந்த விவகாரத்தில் இறுதி முடிவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

சலச்சவங்க இல்ல:
அந்த நிலையில் தற்போதுள்ள பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உணர்வுபூர்வமான முடிவை எடுக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய தேர்வுக்குழு தலைவர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர் நீங்களும் தங்களது நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். குறிப்பாக இந்திய பிரதமர் மோடி அதற்கு பச்சைக் கொடி காட்ட வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்த அவர் இந்திய அணியை வரவேற்பதற்காக பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

INDvsPAK-1

இந்நிலையில் பிசிசிஐ உலகின் பணக்கார வாரியமாக இருந்தாலும் அதற்காக பாகிஸ்தான் பலவீனமாக இருப்பதாக அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் ஷாஹித் அப்ரிடி இந்தியா தங்களது நாட்டுக்கு வந்து ஆசிய கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நம்மிடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான அனைத்து பிரச்சனைகளையும் பிசிசிஐ தீர்வு காண வேண்டும். எப்போதுமே பாகிஸ்தான் தங்களது நாட்டுக்கு இந்தியா வந்து விளையாடுவதை விரும்புகிறது. அதே போல் நாங்களும் அங்கே சென்று விளையாட விரும்புகிறோம்”

- Advertisement -

“ஆனால் அதற்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் வாரியங்கள் முதலில் ஒரு முறை பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அந்த பேச்சு வார்த்தைக்கு முதல் அடியை எடுத்து வைத்து பிசிசிஐயுடன் சமரசமாக செல்ல நாங்கள் தயார். எனவே எந்த முடிவு எடுப்பதற்கு முன்பாகவும் அவர்கள் பாகிஸ்தான் வாரிய தலைவருடன் ஒருமுறை பேச வேண்டும். ஆனால் நண்பனாக இருக்க விரும்பும் எங்களுடன் எதிரணி கிரிக்கெட் வாரியம் ஒத்துழைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அதே சமயம் எங்களுடைய வாரியம் பலவீனமானதல்ல”

Babar Azam Mohammad Rizwan Shahid Afridi

“நாங்கள் நண்பர்களாக இருக்க விரும்புகிறோம். ஆனால் அதற்கு எதிர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. பிசிசிஐ உலகின் மிகவும் வலுவான பணக்கார வாரியம். எனவே உங்களிடம் அதிகப்படியான பவர் மற்றும் செல்வாக்கு இருக்கும் போது நீங்கள் தான் அனைத்து பொறுப்பையும் ஏற்று நடத்த வேண்டும். நீங்கள் நிறைய நண்பர்களை உருவாக்க வேண்டுமே தவிர எதிரிகளை அல்ல. ஏனெனில் நண்பர்களை உருவாக்குவது தான் உங்களையும் வலுப்படுத்தும்”

இதையும் படிங்க:மும்பை ஜெர்ஸி போட்டதும் அவர் எப்டி அதிரடியா விளையாட போறாருனு பாருங்க – நட்சத்திர இந்திய வீரர் பற்றி டிகே கருத்து

“மொத்தத்தில் இது பற்றிய பேச்சு வார்த்தைகள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஆசிய கோப்பை வேறு நாட்டுக்கு நகர்த்தப்பட்டுள்ளது என்று ஜெய் ஷா தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன. அந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்க நாங்கள் வருவோமா இல்லையா என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்று கூறினார்.

Advertisement