- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வேற லெவல் கோலி எங்க பிளானோட சேத்து அதையும் உடைச்சுட்டாரு.. ஆட்டத்தை ரசித்து பாத்தேன்.. ஜெமிசன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று வதோதராவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 49 ஓவரில் 306/6 ரன்களை குவித்து வெற்றி பெற்று 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு பேட்டிங் துறையில் விராட் கோலி 93, ஸ்ரேயாஸ் ஐயர் 49, கேப்டன் கில் 56 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்கள். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கெய்ல் ஜெமிசன் 4 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கட்டுப்படுத்த திட்டங்களை வகுத்திருந்ததாக நியூஸிலாந்து பவுலர் ஜெமிசன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பிளானை உடைத்த கோலி:

ஆனால் அந்தத் திட்டத்தை உடைத்த விராட் கோலி நியூசிலாந்தின் வெற்றியை உடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது தான் விராட் கோலியின் சிறந்த வெர்சனா இல்லையா என்பதை எதிரணியில் இருந்து கொண்டு சொல்வது கடினம். இருப்பினும் அவர் நீண்ட காலமாகவே நன்றாக விளையாடுகிறார் அல்லவா?”

“ஒவ்வொரு முறையும் நீங்கள் விராட் கோலிக்கு எதிராக போட்டியிடும் போது உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் வேற லெவல் வீரரான விராட் கோலி தன்னுடைய வித்தியாசமான லெவலில் ஆட்டத்தை விளையாடுகிறார். போட்டியின் பெரும்பாலான சமயங்களில் அவர் நன்றாக விளையாடுகிறார். எனவே நாங்கள் அவரை கட்டுப்படுத்த சில திட்டங்களுடன் வர முயற்சிக்கிறோம்”

- Advertisement -

ஜெமிசன் பாராட்டு:

“இருப்பினும் சில சமயங்களில் நீங்கள் மகத்தான வீரர்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் தங்களுடைய வழியில் விளையாடுவார்கள். அதனால் அவர்களுடைய ஆட்டத்தை நீங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டிய நிலை வரும். அந்த வகையில் இப்போட்டியில் மிடில் ஓவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திய விராட் கோலி தன்னுடைய அணிக்காக இன்னிங்ஸை சிறந்த முறையில் அமைத்தார்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக இதை செய்ய என்னை வளக்குறாங்க.. அவங்க சப்போர்ட் தான் அசத்தலுக்கு காரணம்.. ராணா பேட்டி

“எங்களுடைய இளம் வீரர்கள் முதல் முறையாக இந்தியாவில் ரசிகர்கள் மற்றும் சத்தத்திற்கு நடுவே விளையாடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். குறிப்பாக ரசிகர்கள் விராட், ரோஹித் ஆகியோர் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்கள் சத்தமிடுவதை பார்ப்பது நல்ல அனுபவம்” என்று கூறினார். மேலும் ஷேன் பாண்ட், கிளன் மெக்ராத், பிரட் லீ ஆகியோரை பார்த்து வளர்ந்ததாக ஜெமிசன் தெரிவித்தார். கொஞ்சம் வளர்ந்த பின் டேல் ஸ்டைன், பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், ஜஸ்ப்ரித் பும்ரா, ககிஸோ ரபாடா ஆகியோரைப் பார்த்தும் தம்மை மெருகேற்றுவதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -