இந்திய கிரிக்கெட் அணி வதோதராவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன்களை குவித்து வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு பேட்டிங் துறையில் விராட் கோலி 93, கேப்டன் சுப்மன் கில் 56, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்கள். பந்து வீச்சுத் துறையில் ஹர்ஷித் ராணா, பிரசித் ராணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். முன்னதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆதரவுடன் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
வளர்க்கும் இந்திய அணி:
அந்த வாய்ப்பில் ஆரம்பக்கட்ட பெரும்பாலான போட்டிகளில் சுமாராக விளையாடிய அவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் தொடர்ச்சியான ஆதரவால் அவ்வப்போது அசத்தும் ராணா இப்போட்டியில் நியூஸிலாந்து அமைத்த 117 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை விட பேட்டிங்கில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
அப்போது களமிறங்கி அதிரடியாக விளையாடிய ராணா 29 (22) ரன்கள் விளாசி திருப்புமுனையை உண்டாக்கினார். அதைப் பயன்படுத்திய ராகுல் 29*, சுந்தர் 7* ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் 7, 8வது இடத்தில் ஆல் ரவுண்டராக விளையாட தம்மை இந்திய அணி வளர்த்து வருவதாக ராணா தெரிவித்துள்ளார்.
சப்போர்ட் பன்றாங்க:
அதற்கு தேவையான ஆதரவை இந்திய அணி வழங்குவதாலேயே தம்மால் அசத்த முடிவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணி என்னை ஆல் ரவுண்டராக வளர விரும்புகிறார்கள். அதற்காக தொடர்ந்து உழைப்பது என்னுடைய வேலையாகும். அதற்காக வலைப்பயிற்சியில் நான் வேலை செய்கிறேன். அது தன்னம்பிக்கையைப் பொறுத்தது. களத்திற்கு பேட்டிங் செய்ய செல்லும் போது என்னுடைய சக வீரர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை எனக்கு நிறைய உதவுகிறது”
இதையும் படிங்க: நம்பர் ஒன் இந்தியாவுக்கு எதிரா இதை செஞ்சதுக்கு பெருமைப்படுறோம்.. தோல்விக்கு இதான் காரணம்.. பிரேஸ்வெல் பேட்டி
“அதில் கவனம் செலுத்தும் என்னால் ஸ்கோர் செய்ய முடிகிறது. பேட்டிங்கை பொறுத்த வரை எங்கள் அணி என்னை 7, 8வது இடத்தில் ஆல் ரவுண்டராக விளையாடுவதை விரும்புகிறது. அதற்காக என்னுடைய பேட்டிங்கில் நான் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். 7வது இடத்தில் என்னால் அணிக்காக 30 – 40 ரன்கள் அடிக்க முடியும் என்று நம்புகிறேன். அணியும் அதை நம்புகிறார்கள். அப்படி நம்பிக்கையும் சூழ்நிலையும் நன்றாக இருக்கும் போது, சீனியர்கள் ஆதரவளிக்கும் போது, அனைவரும் நேர்மறையாக சிந்திக்கும் போது களத்தில் உங்களது ஆட்டம் நன்றாக செல்லத் துவங்கும்” என்று கூறினார்.



