CWC 2023 : 50 பார்ட்னர்ஷிப்பில் 50.. மாஸ் காட்டிய மெண்டிஸ்.. சங்ககாராவை மிஞ்சி 21 வருட தனித்துவ சாதனை

Kushal Mendis
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பையில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற 4வது லீக் போட்டியில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் சுமாராக பந்து வீசிய இலங்கையை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 428/5 ரன்கள் சேர்த்து வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 100, வேன் டெர் டுஷன் 108, ஐடன் மார்க்ரம் 106 என 3 வீரர்கள் சதமடித்து சாதனை படைக்க உதவினார்கள். சொல்லப்போனால் இதன் வாயிலாக உலக கோப்பையில் ஒரே போட்டியில் 3 சதங்கள் பதிவு செய்த கிரிக்கெட் அணி என்ற மற்றுமொரு உலக சாதனையை தென்னாப்பிரிக்கா படைக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தனி ஒருவன் மெண்டிஸ்:
அதை தொடர்ந்து 429 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 0, குசால் பெரேரா 7, சமரவிக்ரமா டீ சில்வா 11 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் குசால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, கேப்டன் சனாக்கா 68 ரன்கள் எடுத்தும் 44.5 ஓவரில் இலங்கையை 326 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்கள் எடுத்தார்.

முன்னதாக இந்த போட்டியில் 429 ரன்களை சேசிங் செய்த இலங்கைக்கு 2வது ஓவரிலேயே மார்கோ யான்சென் வேகத்தில் நிஷாங்கா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அந்த நிலைமையில் வந்த குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். ஆனால் எதிர்ப்புறம் தடவலாக செயல்பட்ட குசால் பெரேரா சிங்கிள் கூட எடுக்க முடியாமல் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் அவருக்கும் சேர்த்து அடித்து நொறுக்கிய குசால் மெண்டிஸ் 25 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அப்போதும் எதிர்ப்புறம் குசால் பெரேரா 0 ரன்களில் இருந்த நிலையில் 3 எக்ஸ்ட்ரா ரன்களுடன் இலங்கை 54/1 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அந்தளவுக்கு தனி ஒருவனாக இலங்கையின் முதல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களையும் எடுத்துப் போராடிய மெண்டிஸ் மொத்தம் 4 பவுண்டரி 8 சிக்ஸருடன் 76 (42) ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க: CWC 2023 : 74 ஃபோர்ஸ் 31 சிக்ஸ்.. ரன் மழையில் நனைந்த டெல்லி.. தெ.ஆ – இலங்கை மேட்ச் மெகா உலக சாதனை

அதில் 72 ரன்களை அவர் பவர் பிளே எனப்படும் முதல் 10 ஓவர்களில் எடுத்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் அல்லாத பேட்ஸ்மேன் என்ற தனித்துவமான சாதனையை குசால் மெண்டிஸ் படைத்துள்ளார். இதற்கு முன் 2002ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் குமார் சங்ககாரா அதே போல களமிறங்கி முதல் 10 ஓவருக்குள் 55 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement