CWC 2023 : 74 ஃபோர்ஸ் 31 சிக்ஸ்.. ரன் மழையில் நனைந்த டெல்லி.. தெ.ஆ – இலங்கை மேட்ச் மெகா உலக சாதனை

SL vs RSA
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலக கோப்பையில் அக்டோபர் 7ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்த போதிலும் சுமாராக செயல்பட்ட இலங்கையை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 428/5 ரன்கள் சேர்த்தது.

அதன் வாயிலாக உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கிரிக்கெட் அணி என்ற உலக சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 100, வேன் டெர் டுஷன் 108, ஐடன் மார்க்ரம் 106 என 3 வீரர்கள் சதமடித்து மிரட்டினார்கள். அதன் வாயிலாக உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் 3 சதங்கள் பதிவு செய்த அணி என்ற மற்றுமொரு உலக சாதனையை தென்னாப்பிரிக்கா படைக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

உலக சாதனை போட்டி:
அதைத்தொடர்ந்து 429 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கைக்கு குசால் மெண்டிஸ் 76 (42) அசலங்கா 79 (65) கேப்டன் சனாகா 68 (62) ரன்களை அதிரடியாக எடுத்த போதிலும் நிசாங்கா 0, குசால் பெரேரா 7, டீ சில்வா 11, சமரவிக்ரமா 23 என இதர பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி கை கொடுக்கத் தவறினார்கள். அதனால் 44.5 ஓவரில் இலங்கையை சுருட்டி வென்ற தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இப்போட்டி நடைபெற்ற டெல்லி மைதானம் பொதுவாகவே சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட தடுமாறுவார்கள். ஆனால் இப்போட்டியின் பிட்ச் ஃபிளாட்டாக இருந்ததை பயன்படுத்தி அடித்து நொறுக்கிய தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக 45 பவுண்டரிகளும் 14 சிக்ஸர்களும் அடித்தார்கள். அதே போல இலங்கை பேட்ஸ்மேன்கள் தங்களால் முடிந்தளவுக்கு போராடி 29 பவுண்டரிகளும் 17 சிக்ஸர்களும் அடித்தார்கள்.

- Advertisement -

அந்த வகையில் மொத்தமாக இரு அணி வீரர்களும் சேர்ந்து 74 பவுண்டரிகளும் 31 சிக்ஸர்களும் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்கள். மேலும் எக்ஸ்ட்ராஸ் உட்பட தென்னாபிரிக்கா 428 ரன்கள் அடித்த நிலையில் இலங்கை 326 ரன்கள் சேர்த்தது. அந்த வகையில் மொத்தம் இரு அணிகளும் சேர்ந்து 754 ரன்கள் குவித்து டெல்லி ரசிகர்களை ரன் மழையால் நனைத்தார்கள் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: SL vs RSA : அவங்க 3 பேர் டீம்ல இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்பு. தோல்விக்கு பிறகு – தசுன் ஷனகா வருத்தம்

அதை விட இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் (754) குவிக்கப்பட்ட போட்டியாக இந்த தென்னாப்பிரிக்கா – இலங்கை போட்டி உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2019 உலகக் கோப்பையில் நாட்டிங்கம் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியில் 714 ரன்கள் அடிக்கப்பட்டதே முந்தைய உலக சாதனையாகும்.

Advertisement