ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரா நாங்க தோக்க இதுதான் காரணம். சப்பை கட்டு கட்டிய இலங்கை கேப்டன் (பேட்டி இதோ)

Kusal-Mendis
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியானது (இன்று) அக்டோபர் 30-ஆம் தேதி புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே குவித்தது. இலங்கை அணி சார்பாக துவக்க வீரர் பதும் நிசங்கா 46 ரன்களையும், கேப்டன் குசால் மெண்டிஸ் 39 ரன்களையும், சமர விக்ரமா 36 ரன்களையும் குவித்தனர். இலங்கை அணி சார்பாக எந்தவொரு வீரரும் அரைசதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது முதல் ஓவரிலேயே துவக்க வீரர் குர்பாஸின் விக்கெட்டை ரன் எதுவும் எடுக்காமல் இழந்திருந்தாலும் அதன் பின்னர் களமிறங்கிய அனைவருமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இப்ராஹீம் ஜாட்ரான் 39 ரன்களையும், ரஹ்மத் ஷா 62 ரன்களையும், கேப்டன் ஷாஹிதி 58 ரன்களையும், ஓமர்சாய் 73 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் தற்போது ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதே வேளையில் இலங்கை 6 போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் கூறுகையில் : நாங்கள் போதுமான அளவு இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அதோடு இன்னும் நிறைய ரன்களை இந்த மைதானத்தில் குவித்திருக்க வேண்டும். 300 ரன்கள் அல்லது 280 ரன்கள் வரை குவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் எங்களால் அந்த அளவிற்கு ரன்களை குவிக்க முடியவில்லை. அதோடு எங்களது பந்துவீச்சாளர்கள் முதல் பத்து ஓவரில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

இதையும் படிங்க : இந்திய ரசிகர்களுக்கு நன்றி.. அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் எங்க வெற்றிக்கு காரணம்.. ஆப்கன் கேப்டன் பேட்டி

இருப்பினும் அதன்பிறகு மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. டியூ காரணமாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களால் பந்தினை கிரிப் செய்து வீச முடியவில்லை. டியூ காரணமாக இரண்டாம் பாதியில் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக சென்றது. மதுஷாங்கா கடந்த சில போட்டிகளாகவே சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவரது செயல்பாடு எதிர்காலத்திலும் சிறப்பாக இருக்கும் என்று நம்புவதாக குசால் மெண்டிஸ் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது டியூ காரணமாகவே ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக குசால் மெண்டிஸ் சப்பை கட்டி உள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தான் அணி அவர்களது சிறப்பான ஆட்டம் காரணமாகவே இலங்கை அணியை வென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement