இது சாம்பிள் தான். இன்னும் 4 மேட்ச் இருக்கு.. அதுல 3 ஜெயிச்சா கூட போதும் – வெற்றிக்கு பிறகு குசால் மெண்டிஸ் பேசியது என்ன?

Kusal Mendis
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 26ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சந்தித்தன. அதில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த போதிலும் சுமாராக செயல்பட்டு 33.2 ஓவரில் வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு ஜோ ரூட், கேப்டன் பட்லர் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43, ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் அசத்திய இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இலங்கைக்கு குசால் பெரேரா 4, குஷால் மெண்டிஸ் 11 ரன்களில் டேவிட் வில்லி வேகத்தில் அவுட்டானார்கள்.

- Advertisement -

செமி ஃபைனல் வாய்ப்பு:
ஆனாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட துவக்க வீரர் நிசாங்கா 77* ரன்களும் சமரவிக்ரமா 65* ரன்களும் எடுத்து 25.4 ஓவரிலேயே இலங்கையை எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதனால் 4வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ள இங்கிலாந்தின் செமி பைனல் வாய்ப்பு 90% கேள்விக்குறியாகியுள்ளது.

மறுபுறம் 2வது வெற்றியை பதிவு செய்த இலங்கை ரன்ரேட் (-0.20) அடிப்படையில் பாகிஸ்தான் (-0.40) ஆப்கானிஸ்தான் (-0.97) ஆகிய அணிகளை விட 5வது இடத்திற்கு முன்னேறி செமி ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தங்களுடைய அணி அடுத்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றால் செமி ஃபைனலுக்கு சென்று விடுவோம் என்று இலங்கை கேப்டன் குஷால் மண்டிஸ் உற்சாகத்துடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் மேத்தியூஸ் அணிக்கு திரும்பி அசத்தியுள்ளது வலுவை சேர்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “ரன்ரேட் அணிக்கு நல்லது. நாங்கள் பந்து வீச்சில் அசத்தியதை போல இன்று எங்களுடைய அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பெற்றால் நாங்கள் செமி ஃபைனலில் இருப்போம். அந்த போட்டியிலும் எங்களுடைய வீரர்கள் அசத்தினார்கள்”

இதையும் படிங்க: 146 பந்துகள் மீதம்.. உலக சாம்பியனை தெறிக்க விட்ட இலங்கை.. இங்கிலாந்தின் கதை முடிந்ததா?

“குறிப்பாக இன்று அசத்திய குமாரா 140 – 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய எங்களுடைய முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இன்று வலுவாக செயல்பட்டதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். மேத்தியூஸ் சிறப்பாக பந்து வீசியதை போலவே பேட்டிங்கிலும் அழுத்தமான சூழ்நிலையில் அசத்தும் தன்மை கொண்டவர். அவருடன் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எங்களுடைய ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது இதை நாங்கள் அடுத்த 4 போட்டிகளில் தொடர விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement