அம்பயர் நியாயமா நடந்துக்கல.. வருங்காலத்துல சொல்லி அடிக்கும் அணியா மாறுவோம்.. இலங்கை கேப்டன் பேட்டி

Kusal Mendis 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அசலங்கா சதமடித்து 108 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 280 ரன்கள் துரத்திய வங்கதேசத்திற்கு கேப்டன் சாகிப் அல் ஹசன் 82 ரன்களும் நஜ்முல் சாண்டோ 90 ரன்களும் எடுத்து 41.1 ஓவரிலேயே வெற்றி பெற உதவினார்கள்.

- Advertisement -

சொல்லி அடிப்போம்:
அதனால் அதிகபட்சமாக மதுசங்கா 3 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியாத இலங்கை தொடரில் 6வது தோல்வியை பதிவு செய்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் 30 – 40 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்க தவறியது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்தடுத்த தொடர் தோல்விகளால் தற்போது தங்களுடைய அணி தடுமாறினாலும் வருங்காலங்களில் சொல்லி அடிக்கும் கில்லி போன்ற அணியாக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஹெல்மெட் பழுதானதால் வரலாற்றிலேயே முதல் முறையாக காலதாமதத்திற்காக மேத்யூஸ் அவுட் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கிய நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லை என்றும் விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அசலங்கா அபாரமான இன்னிங்ஸ் விளையாடினார். ஆனால் நாங்கள் 30 – 40 ரன்கள் குறைவாக எடுத்தோம். இருப்பினும் இத்தொடரில் சில இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று நம்பிக்கையளிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் வருங்காலத்தில் நிச்சயமாக நாங்கள் நல்ல அணியாக உருவெடுப்போம். இத்தொடரில் எங்களுடைய சில முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்தனர். மேலும் நாங்களும் சில தவறுகளை செய்தோம்”

இதையும் படிங்க: ஆஞ்சலோ மேத்யூஸ் விஷயத்தில் நான் அந்த முடிவை எடுக்க காரணமே இதுதான் – ஷாகிப் அல் ஹசன் பேட்டி

“ஒருவேளை நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி இருந்தால் இன்னும் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் ஏஞ்சலோ மேத்யூஸ் களத்திற்கு வந்த போது 5 வினாடிகள் மீதம் இருந்தும் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது ஏமாற்றத்தை கொடுக்கிறது. அதன் பின் அவர் தன்னுடைய ஹெல்மெட்டில் சில பிரச்சனையை சந்தித்தார். ஆனால் கடைசியில் அந்த விவகாரத்தில் நடுவர்கள் தலையிட்டு சரியான தீர்ப்பு வழங்காதது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement