எல்லாம் அவரோட ராசி.. சர்பராஸ் கான் ரன் அவுட்டாக கும்ப்ளே தான் காரணமா? – என்னப்பா இதெல்லாம்?

Kumble-and-Sarfaraz
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கார்ட் அறிமுக வீரராக தனது முதல் வாய்ப்பினை பெற்றார். அவருக்கு போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான அணில் கும்ப்ளே அறிமுக தொப்பையை வழங்கி இருந்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது போட்டியின் துவக்கத்திலேயே 33 ரன்களுக்கு 3 விக்கெட் என்கிற மோசமான நிலையில் சந்தித்தபோது ரோகித் சர்மாவுடன் சர்பராஸ் கான் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு முன்னதாக ஜடேஜா களமிறங்கினார்.

- Advertisement -

பின்னர் மிகச்சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்த அவர்கள் இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அவர்கள் இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 204 ரன்கள் சேர்த்தனர். அதன் காரணமாக 237 ரன்கள் எடுத்திருந்தபோது 4 ஆவது விக்கெட்டாக ரோகித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன் பின்னர் ஜடேஜாவுடன் கைகோர்த்த சர்பராஸ் கான் களத்திற்கு வந்ததிலிருந்தே அனைத்து வகையான ஷாட்டுகளையும் பயன்படுத்தி பவுண்டரிகளை அடித்துக் கொண்டே இருந்தார். குறிப்பாக 48 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் 66 பந்துகளை சந்தித்திருந்தபோது 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 62 ரன்கள் குவித்திருந்த வேளையில் ஜடேஜாவில் தவறான அழைப்பு காரணமாக ரன் ஓடி வந்து ரன் அவுட் ஆனார்.

- Advertisement -

இப்படி சிறப்பாக விளையாடி வந்த சர்பராஸ் கான் தேவையில்லாமல் ஓடி வந்து ரன் அவுட்டாக ஒரு வகையில் அணில் கும்ப்ளேவும் காரணம் என இன்று காலையிலிருந்து ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்திய அணிக்காக புதிதாக அறிமுகமாகும் வீரர்களுக்கு அனுபவ வீரர்கள் அல்லது முன்னாள் வீரர்கள் போன்றோர் அறிமுக தொப்பியை வழங்குவது வழக்கம்.

இதையும் படிங்க : இவரையா இவ்ளோ நாள் டீம்ல சேக்காம இருந்தீங்க? சர்பராஸ் கானின் டெக்னீக்கை கவனிசீங்களா? – மாஸ்டர் கிளாஸ்

அந்த வகையில் தான் அணில் கும்ப்ளே சர்பராஸ் கானிற்கு அறிமுக தொப்பியை வழங்கியிருந்தார். இப்படி சர்பராஸ்க்கு அறிமுக தொப்பியை வழங்கியிருந்த அணில் கும்ப்ளேவும் 1990-ஆண்டு தான் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிராக 2 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகியிருந்தார். அவருடைய ராசி தான் தற்போது அவர் கையால் தொப்பியை பெற்ற சர்பராஸ் கானும் தனது முதல் போட்டியில் ரன் அவுட்டாகி விட்டார் என்ற ஒரு வினோதமான கருத்தும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement