இவரையா இவ்ளோ நாள் டீம்ல சேக்காம இருந்தீங்க? சர்பராஸ் கானின் டெக்னீக்கை கவனிசீங்களா? – மாஸ்டர் கிளாஸ்

Sarfaraz-Khan
- Advertisement -

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே சதங்களை குவித்து ஆயிரக்கணக்கில் ரன்களை அடித்து வந்த சர்பராஸ் கானிற்கு ஏழு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இந்திய அணியில் இடம் கிடைத்தது. அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு வழியாக இன்று அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார்.

அந்தவகையில் ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான் பேட்டிங்கில் ஆறாவது வீரராக களமிறங்கி ஜடேஜாவுடன் இணைந்து அற்புதமான பாட்னர்ஷிப் அமைத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

- Advertisement -

இந்த போட்டியில் 66 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 62 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஜடேஜாவின் தவறான அழைப்பினால் ஓடிவந்து ரன் அவுட் ஆனார். அதனால் அவர் தனது அற்புதமான வாய்ப்பை பாதியிலேயே இழந்தாலும் சர்பராஸ் கான் விளையாடிய விதம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

அதோடு இப்படி ஒரு பேட்டிங் டெக்னிக்கை வைத்திருக்கும் இவரை ஏன் இவ்வளவு தாமதமாக டெஸ்ட் அணியில் இணைத்தீர்கள்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் பொதுவாகவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களை குவிக்க தடுமாறி வரும் வேளையில் இன்றைய போட்டியில் சர்பராஸ் தான் எளிதாக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.

- Advertisement -

குறிப்பாக ஸ்வீட் ஷாட், புல் ஷாட், கட் ஷாட், லேட் கட், ஸ்கொயர் ட்ரைவ் என அனைத்து வகையான ஷாட்களையும் சிறப்பாக விளையாடும் அவர் தைரியமாக இறங்கி வந்து கிரீசை பயன்படுத்தியும் மேலே ஏறிவந்து அடிக்கிறார். அதேபோன்று ஸ்டஃம்பிற்கு பின்னால் வரை சென்று பந்தை தட்டி விடுவது என அனைத்து வகையான பேட்டிங் டெக்னிக்கையும், சிறப்பான கால் நகர்வுகளையும் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : வழக்கமான பாணியில் ஸ்வார்டு செலிப்ரேஷன் இல்லாமல் வருத்தத்துடன் சதத்தை கொண்டாடிய ஜடேஜா – காரணம் என்ன?

அவரது இந்த அணுகுமுறையின் மூலமாகவும், சிறப்பான பேட்டிங் டெக்னிக் மூலமாகவும் அவர் விளையாடுவதால் எளிதாக பவுண்டர்கள் கிடைக்கின்றது. அதோடு ரன் எடுக்க முடியாத பந்துகளில் கூட அவர் பந்தை இடைவெளியில் தட்டிவிட்டு சிங்கிள் ஓட நினைக்கிறார். இப்படி கிடைக்கும் பந்துகளில் எல்லாம் ரன்களை குவிக்க நினைக்கும் இப்படி ஒரு வீரர் தான் டெஸ்ட் அணிக்கு தேவை என்பது போல அவர் இந்திய அணிக்கு தனது பேட்டிங்கின் மூலம் மாஸ்டர் கிளாஸ் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement