வழக்கமான பாணியில் ஸ்வார்டு செலிப்ரேஷன் இல்லாமல் வருத்தத்துடன் சதத்தை கொண்டாடிய ஜடேஜா – காரணம் என்ன?

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல்நாள் ஆட்டநேரம் முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த வேளையில் ரவீந்திர ஜடேஜா இன்றைய ஆட்டநேர முடிவில் 110 ரன்களுடன் களத்திற்கு உள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி தங்களது இன்னிங்சை ஆரம்பித்ததும் 22 ரன்களுக்கு எல்லாம் முதல் விக்கெட்டை இழந்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணியானது 33 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், சுப்மன் கில் ரன் எதுவும் அடிக்காமலும், ரஜத் பட்டிதார் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது ஜோடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டிற்கு 204 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

பின்னர் ரோகித் சர்மா 131 ரன்களில் ஆட்டமிருந்து வெளியேற இன்றைய ஆட்டநேர இறுதியில் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் அவர் வழக்கம் போல தனது ஸ்வார்டு செலிப்ரேஷனை மகிழ்ச்சியாக கொண்டாடவில்லை.

இதையும் படிங்க : 326 ரன்ஸ் அடிச்சா என்ன.. இந்தியா மீது இரக்கமே காட்டத்தீங்க.. இங்கிலாந்துக்கு நாசர் ஹுசைன் அறிவுரை

ஏனெனில் அவர் 99 ரன்கள் இருந்தபோது சர்ஃபராஸ் கான் 62 ரன்கள் எடுத்து சிறப்பாக பேட்டிங் செய்திருந்த வேளையில் அவர் ரன் அவுட் செய்ய காரணமாக இருந்து விட்டார். இதன் காரணமாக வருத்தத்தில் இருந்த அவர் சதத்தை பூர்த்தி செய்த பிறகும் மகிழ்ச்சியாக அவரது ஸ்வார்டு செலிப்ரேஷனை செய்யாமல் அரை மனதுடன் ரசிகர்களுக்காக சாதாரணாமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement