அரையிறுதியிலயும் இதுதான் நடக்கும்.. நியூசிலாந்து அணியை எச்சரித்த – குல்தீப் யாதவ்

Kuldeep-Yadav
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் எதிர்வரும் இந்த நாக் அவுட் சுற்று போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்து அணியையும், தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்ள இருக்கின்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இந்த அரையிறுதி போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு இம்முறை கைக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை இந்திய அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இம்முறை அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்தி பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் எதிர்வரும் அரையிறுதி போட்டி குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த 2019-ஆம் ஆண்டு அரையிறுதியில் நாங்கள் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தோம். ஆனால் அது நடந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.

- Advertisement -

அதன் பிறகு நாங்கள் நிறைய ஒருநாள் தொடர்களில் சிறப்பாக விளையாடி உள்ளோம். நிச்சயம் எங்களால் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இப்போது நமது அணி மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடி வருவதாலும் நமது தயாரிப்பு சிறப்பாக இருப்பதாலும் இந்த தொடர் முழுவதுமே வெற்றியைப் பெற்று வருகிறோம்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி இப்படி மோசமான நிலையை சந்திக்க அந்த 3 பேர் தான் காரணம் – முகமது கைப் பதிவு

எனவே நிச்சயம் அடுத்த போட்டியிலும் நாங்கள் இதே செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு செல்வோம் என குல்தீப் யாதவ் கூறியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற அரையிறுதியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி நிச்சயம் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உளளது குறிப்பிடத்தக்கது.

Advertisement