அது முடிஞ்சு போன கதை.. இப்போ நியூஸிலாந்தை சாய்க்க அந்த பிளான் ரெடி.. குல்தீப் உறுதியான பேட்டி

Kuldeep Yadav
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 9 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக தீபாவளி தினத்தன்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக செமி ஃபைனல் சுற்றில் காலடி வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்த நியூஸிலாந்தை முதலிடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. அதில் இதுவரை தொடர்ச்சியாக வென்றுள்ள இந்திய அணியால் நியூசிலாந்தை தோற்கடித்து சாதிக்க முடியுமா என்ற கேள்வியும் கவலையும் இந்திய ரசிகர்களிடம் இருக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

பழைய கதை:
ஏனெனில் ஐசிசி தொடரில் பெரும்பாலும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள இந்தியா நாக் அவுட் சுற்றில் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட 3 போட்டிகளிலும் படுதோல்விகளை சந்தித்துள்ளது. குறிப்பாக 2019 உலகக் கோபையில் ஜடேஜா மற்றும் தோனி ஆகியோரின் போராட்டத்தையும் தாண்டி நியூசிலாந்திடம் நெஞ்சை உடைக்கும் தோல்வியை இந்தியா பதிவு செய்தது ரசிகர்களால் இன்னும் மறக்க முடியவில்லை.

இந்நிலையில் 2019 செமி ஃபைனல் 4 வருடங்களுக்கு முன்பாக நடந்த பழைய கதை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை புதிய முயற்சியில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்தால் நிச்சயம் நியூசிலாந்தை மும்பையில் இந்திய அநியால் தோற்கடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2019 செமி ஃபைனல் 4 வருடங்களுக்கு முன்பாக நடந்தது”

- Advertisement -

“அப்போட்டிக்கு பின் நாங்கள் நிறைய இருதரப்பு தொடர்களில் விளையாடியுள்ளதால் இந்தியாவின் கால சூழ்நிலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும். எங்களுடைய தயாராகும் முறைகள் நன்றாக இருக்கும் நிலையில் இத்தொடர் முழுவதும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். எனவே அதையே நாங்கள் அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று எதிர்பார்க்கிறேன். இருப்பினும் செமி ஃபைனல் நடைபெறும் மும்பையில் பந்து வீசுவதற்கு சற்று கடினமாக இருக்கும்”

இதையும் படிங்க: சச்சின் – ரோஹித் கனெக்ஷன்.. தந்தையையே மிஞ்சிய மகன்.. மாபெரும் உ.கோ சாதனை படைத்த நெதர்லாந்து வீரர்

“ஏனெனில் அங்கே நல்ல பவுன்ஸ் இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குவார்கள். ஆனாலும் நியூசிலாந்துக்கு எதிராக ஆரம்பத்திலேயே சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்தால் எங்களால் வெற்றி காண முடியும். நான் என்னுடைய ரிதம் மற்றும் பலத்தில் செலுத்துகிறேன். முடிந்தளவுக்கு நல்ல லென்த் பகுதிகளில் பந்து வீச முயற்சிக்கிறேன். அது அடுத்த போட்டியில் வேலை செய்யும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement