சச்சின் – ரோஹித் கனெக்ஷன்.. தந்தையையே மிஞ்சிய மகன்.. மாபெரும் உ.கோ சாதனை படைத்த நெதர்லாந்து வீரர்

Bas and Tim Lee Dee
Advertisement

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியாவிடம் 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நெதர்லாந்து ஆறுதல் வெற்றியை பெற முடியாமல் வெளியேறியது. பெங்களூரு நகரில் தீபாவளி தினத்தன்று நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடி 411 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, ராகுல் 102 ரன்கள் எடுத்து ஒரு உலகக்கோப்பை போட்டியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50+ ரன்கள் அடித்த முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைக்க உதவினர். நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 2 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 411 ரன்கள் துரத்திய நெதர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

தந்தையை மிஞ்சிய மகன்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமன்று 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், பும்ரா மாற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் 9 லீக் போட்டியிலும் 9 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா அடுத்ததாக நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்ள தயாரானது.

மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய நெதர்லாந்து இந்த உலகக்கோப்பையில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இருப்பினும் வலுவான தென்னாப்பிரிக்காவை தங்களுடைய வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து அசதிய அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி ஆல் ரவுண்டராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக இப்போட்டியில் எடுத்த 2 விக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 9 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த நெதர்லாந்து வீரர் என்ற தம்முடைய தந்தையான டிம் டீ லீடி’யின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன் கடந்த 2003 உலகக் கோப்பையில் டிம் டீ லீடி 14 விக்கெட்டுகளை எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: ஜாம்பவான் யுவி, அனில் கும்ப்ளேவின் 27 வருட சாதனையை சுழலால் உடைத்த ஜடேஜா.. புதிய வரலாற்று சாதனை

சொல்லப்போனால் 2003 உலகக்கோப்பையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தன்னுடைய முதல் விக்கெட்டாக டிம் டீ லீடி எடுத்தார். மறுபுறம் 2023 உலகக்கோப்பையில் தற்போதைய இந்திய அணியின் ஜாம்பவானாக இருக்கும் ரோகித் சர்மாவின் விக்கெட்டை எடுத்த பஸ் டீ லீடி தன்னுடைய தந்தையின் மாபெரும் சாதனையை உடைத்தார். அந்த வகையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் தம்முடைய சாதனை உடைத்தாலும் தன்னுடைய மகனின் செயல்பாடுகளை நினைத்து டிம் டீ லீடி இந்நேரம் நெதர்லாந்தில் பெருமைப்படுபவராக இருப்பார் என்றே சொல்லலாம்.

Advertisement