தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தருக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு – ஒருவழியா வாய்ப்பு குடுத்துட்டாங்க

Sundar-1
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

prasidh 1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த டி20 தொடருக்கு முன்னதாக துவக்க வீரர் கே.எல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகினர். இந்நிலையில் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு இந்திய வீரர் விலகியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தற்போது நடைபெற இருக்கும் இந்த டி20 தொடரிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

kuldeep

இவ்வேளையில் அவர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்த காயத்திற்கான சிகிச்சை பெற கொல்கத்தாவிலிருந்து அவர் நாளை பெங்களூரு சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதனை உறுதி செய்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் வாஷிங்டன் சுந்தருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மூன்று வாரங்கள் பெங்களூரில் தங்கி சிகிச்சை எடுக்க உள்ளார். இதன்காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என்று கூறியுள்ளது. ஏற்கனவே ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் வெளியேறிய நிலையில் ருதுராஜ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ரிஷப் பண்டிற்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

இந்நிலையில் காயம் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒரு நாள் தொடரில் அணியில் இடம் பிடித்து இருந்த குல்தீப் யாதவ்க்கு மீண்டும் டி20 அணியின் நீண்ட நாள் கழித்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான பௌலிங் காரணமாக இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட அவருக்கு ஒருநாள் தொடரை தொடர்ந்து தற்போது டி20 தொடரிலும் ஒருவழியாக இந்திய நிர்வாகம் வாய்ப்பினை வழங்கி உள்ளது. இருப்பினும் அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

Advertisement