வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் ரிஷப் பண்டிற்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ

Pant-4
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை கொல்கத்தா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க உள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக தற்போது இந்த மூன்று போட்டிகள் கொண்ட t20 தொடரானது நாளை முதல் நடைபெற உள்ளது.

INDvsWI

- Advertisement -

முன்னதாக நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி எளிதாக கைப்பற்றி இருந்தாலும் இந்த டி-20 தொடரை கைப்பற்றுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கருதப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்கு சமமாக டி20 கிரிக்கெட்டில் மேட்ச் வின்னர்களை அதிகமாக வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த தொடரை இந்திய அணி வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும் ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு வீரர்கள் பயிற்சியில் இருந்த வேளையில் இந்திய அணியில் இருந்து ராகுல், அக்ஷர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர்.

Pant-3

இதன் காரணமாக அவர்களுக்கான மாற்று வீரர்களையும் இந்திய அணி அறிவித்துவிட்டது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ராகுல் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் புதிய துணைக்கேப்டனா ரிஷப் பண்ட்டிற்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித்துக்கு அடுத்து துணை கேப்டனாக ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரே போட்டிக்கு இருந்த வேளையில் தற்போது ராகுல் காயத்தால் வெளியேறியதால் பண்டிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில் அடுத்த கேப்டனை தயார்படுத்த வேண்டிய வேளையில் இந்திய நிர்வாகம் இருப்பதால் தற்போது இளம் வீரர்களான ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்களுக்கு கேப்டன் பதவியை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : மெகா ஏலத்தில் விலைபோகாத மொத்த வீரர்களின் பெரிய லிஸ்ட் இதோ – இத்தனை பேரா?

அந்த வகையில் இந்தத் தொடரில் ரோகித் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் தனது மோசமான ஷாட்டுகள் மூலம் ஆட்டமிழந்த ரிஷப் பண்ட் இந்த டி20 தொடரிலாவது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement