ஐபிஎல் 2022 : மெகா ஏலத்தில் விலைபோகாத மொத்த வீரர்களின் பெரிய லிஸ்ட் இதோ – இத்தனை பேரா?

Auction
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்களை ஏலம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018க்கு பின் முதல் முறையாக இந்த ஏலம் மெகா அளவில் 2 நாட்கள் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதிலிருந்து 204 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.

CSK-Auction

- Advertisement -

சுமார் 19 மணி நேரம் அனல் பறந்த இந்த ஏலத்தில் அனைத்து 10 அணிகளால் வாங்கப்பட்ட 204 வீரர்களும் 551 கோடிகளுக்கு ஏலம் போனார்கள். இதில் அதிகபட்சமாக இந்த வருடத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரராக இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி சாதனை படைத்துள்ளார்.

விலைபோகாத நட்சத்திரங்கள்:
அதேபோல் இந்த மெகா ஏலத்தில் அதிக பட்சமாக வெஸ்ட்இண்டீஸ் அணியில் இருந்து 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக 11.50 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் ஸ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர், ஷிகர் தவான், குயின்டன் டி காக், காகிசோ ரபாடா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் நல்ல விலைக்கு இந்த ஏலத்தில் வாங்கப்பட்டார்கள். ஆனால் இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற பல நட்சத்திர வீரர்கள் இந்த ஏலத்தில் விலைபோகாதது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது என்றே கூறலாம்.

- Advertisement -

சரி ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் விலைபோகாத வீரர்களைப் பற்றிய பெயர் மற்றும் அவர்களின் அடிப்படை விலை உள்ள்டங்கிய மொத்த பட்டியல் இதோ:
ஆகாஷ் மத்வால் (20 லட்சம்)
குல்வன்ட் க்ஹெஜரொலியா (20 லட்சம்)
ரோஹன் கதம் (20 லட்சம்)
ஹிஸர் டேபிதர் (20 லட்சம்)
ரோஹன் ராணா (20 லட்சம்)
த்வான் ஜென்சென் (20 லட்சம்)
சிண்ட்ல ரெட்டி (20 லட்சம்)
பாரத் சர்மா (20 லட்சம்)
ப்ரட்யூஸ் சிங் (20 லட்சம்)
சுபம் சர்மா (20 லட்சம்)
ஜெரால்டு கோட்ஸி (20 லட்சம்)
ஷிவங் வஷிஷ்த் (20 லட்சம்)
கோலின் முன்றொ (1.5 கோடி)
மதீஷா பதிரானா (20 லட்சம்)
உட்கர்ஸ் சிங் (20 லட்சம்)
ஸ்காட் குஃகெளிஜன் (75 லட்சம்)
மொய்சஸ் ஹென்றிக்ஸ் (1 கோடி)
அகில் ஹொசைன் (50 லட்சம்)
அஷுதோஷ் சர்மா (20 லட்சம்)
லலித் யாதவ் (20 லட்சம்)
அமித் அலி (20 லட்சம்)
நினத் ரத்வா (20 லட்சம்)
கௌஷல் தாம்பே (20 லட்சம்)
முகேஷ் குமார் (20 லட்சம்)
பிளெஸ்ஸிங் முசாரபாணி (50 லட்சம்)

aaron

சுஷாந்த் மிஸ்ரா (20 லட்சம்)
பிஆர் ஷரத் (20 லட்சம்)
கென்னர் லெவிஸ் (40 லட்சம்)
சாம்ஸ் முலானி (20 லட்சம்)
துருவ் படேல் (20 லட்சம்)
டேவிட் வீஸ் (50 லட்சம்)
அடித் சேத் (20 லட்சம்)
சௌரப் குமார் (20 லட்சம்)
ஹேடன் கெர் (20 லட்சம்)
கேன் ரிச்சர்ட்சன் (1.5 கோடி)
தவால் குல்கர்னி (75 லட்சம்)
பவன் நேகி (50 லட்சம்)
ரோஸ்டன் சேஸ் (1 கோடி)
பென் கட்டிங் (75 லட்சம்)
மிதுன் சுதேசன் (20 லட்சம்)
பங்கஜ் ஜெய்ஸ்வால் (20 லட்சம்)
பென் ட்வர்ஷுய்ஸ் (30 லட்சம்)
பிரஷாந்த் சோப்ரா (20 லட்சம்)
அதர்வா அங்கோல்கர் (20 லட்சம்)

அபூர்வ வான்கடே (20 லட்சம்)
சமீர் ரிஸ்வி (20 லட்சம்)
டாம் கொஹ்லர்-காட்மோர் (40 லட்சம்)
டன்மை அகர்வால் (20 லட்சம்)
சந்தீப் வாரியர் (50 லட்சம்)
ரீஸ் டப்லி (75 லட்சம்)
அண்ட்ரெ டை (1 கோடி)
பென் மெக்தேர்மோட் (50 லட்சம்)
ரஹ்மத்துல்லா குர்பாஸ் (50 லட்சம்)
ஜார்ஜ் கார்டன் (50 லட்சம்)
சரித் அசலங்கா(50 லட்சம்)
சாகிப் அல் ஹசன் (2 கோடி)
ஸ்டீவன் ஸ்மித் (2 கோடி)
சுரேஷ் ரெய்னா (2 கோடி)
அமித் மிஸ்ரா (1.5 கோடி)
ஆடம் சாம்பா (2 கோடி)
முஜீப் உர் ரஹ்மான் (2 கோடி)
இம்ரான் தாஹிர் (2 கோடி)
அடில் ரசித் (2 கோடி)
ஆகாஷ் சிங் (20 லட்சம்)
முஸ்தபா யூசுப் (20 லட்சம்)
அர்சான் நகுவாஸ்வல்ல (20 லட்சம்)

suresh

வாசு வாட்ஸ் (20 லட்சம்)
யாஷ் தாகூர் (20 லட்சம்)
ஹிமான்சு ராணா (20 லட்சம்)
ஹர்னூர் சிங் (20 லட்சம்)
சச்சின் பேபி (20 லட்சம்)
ஹிம்மத் சிங் (20 லட்சம்)
விராட் சிங் (20 லட்சம்)
பியூஸ் சாவ்லா (1 கோடி)
இஷ் சோதி (50 லட்சம்)
க்கைஸ் அஹமத் (50 லட்சம்)
டப்ரிஸ் சம்சி (1 கோடி)
ஷெல்டன் காட்ரல் (75 லட்சம்)
இஷாந்த் சர்மா (1.5 கோடி)
செடேஸ்வர் புஜாரா (50 லட்சம்)
ஆரோன் பின்ச் (1.5 கோடி)
சௌரப் திவாரி (50 லட்சம்)
இயன் மோர்கன் ( 1.5 கோடி)
சந்தீப் லமிச்சனே (40 லட்சம்)
மணிமாறன் சித்தார்த் (20 லட்சம்)
விஸ்ணு சலோங்கி (20 லட்சம்)
ரஜத் படிடார் (20 லட்சம்)

Advertisement