2019இல் தோனியும் போய்ட்டாரு.. கொல்கத்தா அணிக்கு விளையாடியதுக்காக வருந்துறேன்.. குல்தீப் யாதவ் பேட்டி

Kuldeep yadav
- Advertisement -

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தற்சமயத்தில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்களில் ஒருவராக வலம் வருகிறார். உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்த அணியில் நன்றாக விளையாடிய காரணத்தால் அவருக்கு இந்திய அணிக்காகவும் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது.

அந்த வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2019 உலகக் கோப்பை தொடர்களில் அவர் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். ஆனால் அதற்கடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களிடம் சரமாரியாக அடி வாங்கிய அவரை கொல்கத்தா நிர்வாகம் கழற்றி விட்டது. போதாகுறைக்கு அந்த சமயத்தில் காயத்தை சந்தித்ததால் 2021 டி20 உலகக் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப் கழற்றி
விடப்பட்டார்.

- Advertisement -

தோனி இல்லாமல்:
இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த பின் மீண்டும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அபாரமாக விளையாடிய குல்தீப் யாதவ் தற்போது மீண்டும் இந்திய அணியில் இழந்த தம்முடைய இடத்தை மீட்டெடுத்துள்ளார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனிக்கு பின் யாரும் தமக்கு ஆலோசனைக் கொடுத்து சரியான வழியில் வழி நடத்தவில்லை என்று குல்தீப் கூறியுள்ளார்.

அதுவே அந்த சமயத்தில் தாம் தடுமாறுவதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது தமக்கு ஆதரவு வழங்காமல் மோசமாக நடத்தி கழற்றி விட்ட கொல்கத்தா அணிக்காக விளையாடியதை நினைத்து தற்போது வருந்துவதாக குல்தீப் யாதவ் கோபத்துடன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தா அணியில் எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால் தற்போது வழிகாட்டுதல் தேவையில்லை”

- Advertisement -

“2019இல் மஹி பாய் ஓய்வு பெற்றார். அப்போது எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால் தற்போது நான் கொண்டுள்ள ஐடியாக்கள் என்னுடைய அனுபவத்தால் கிடைத்தது. ஆனால் கொல்கத்தா அணியில் (2016 – 2020 வரை) இருந்ததற்காக வருந்துகிறேன். இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து அதை மீண்டும் செய்திருக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியின் கேப்டனாக தோனியின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட் – என்ன தெரியுமா?

“என்னுடைய திறமையில் நான் வேலை செய்திருந்தால் அப்போதே என்னால் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்பதை நினைத்தால் தற்போது வலிக்கிறது. ஆனால் அது அப்போது நடக்கவில்லை. அனுபவம் என்பது நீங்கள் நிறைய விளையாடும் போது தான் கிடைக்கும். அந்தத் தோல்வி பாடத்தை வைத்து தான் நீங்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இன்னும் உங்களுடைய திறமையில் முன்னேற முடியும். அதே சமயம் எதிரணியும் திறமையானவர்கள் என்பதை நீங்கள் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement