- Advertisement -
ஆசிய கோப்பை

4 விக்கெட்ஸ்.. இங்கிலாந்தில் பெஞ்சில் அமர்ந்து.. 7 வருடம் கழித்து ஆட்டநாயகனாக இதான் காரணம்.. குல்தீப் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 10ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் வெறும் 57க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அலிசான் சராஃபு 22, கேப்டன் முகமது வாசிம் 19 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணி 4.3 ஓவரில் 60/1 ரன்களை எடுத்து எளிதாக வென்றது. அதனால் 2025 ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவங்கிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 30, சுப்மன் கில் 20*, கேப்டன் சூரியகுமார் 7* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் குல்தீப்:

இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை விளையாட வைக்குமாறு அனைத்தும் முன்னாள் வீரர்களும் அறிவுறுத்தினார்கள். ஆனால் கடைசி வரை பெஞ்சில் அமர வைத்த இந்திய அணிக்காக இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததும் அபாரமாக பவுலிங் செய்த குல்தீப் 7 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெறாத அவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட் எடுக்க சரியான லென்த்தில் பவுலிங் செய்ததே காரணம் என்று குல்தீப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

7 வருடம் கழித்து:

“சமீப காலங்களில் தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் விளையாடாதது மிகவும் கடினமானது. அந்தக் காலங்களில் என்னுடைய பவுலிங் மற்றும் ஃபிட்னஸ் ஆகிய விஷயங்களில் வேலை செய்தேன். அதற்கு ஸ்ட்ரென்த் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆன்ட்ரியன் உதவினார். அதனால் இன்று அனைத்தும் கட்சிதமாக சென்றது”

இதையும் படிங்க: இந்தியர்கள் ஒன்னும் அவ்ளோ கல் நெஞ்சுக்காரங்க இல்ல.. ஆமீரகத்திடம் நேர்மையைக் காட்டிய சூரியகுமார்

“பேட்ஸ்மேன்களை படித்து அதற்கு தகுந்தார் போல் லென்த்தில் பவுலிங் செய்வது முக்கியமானது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் லென்த் முக்கியமான விஷயம். பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை படிக்க முயற்சிப்பதும் முக்கியம். அடுத்த பந்தில் பேட்ஸ்மேன்கள் என்ன முயற்சிக்கிறார்கள் என்பதற்குத் தகுந்தார் போல் நீங்களும் ரியாக்ட் செய்வது முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -