இந்தியர்கள் ஒன்னும் அவ்ளோ கல் நெஞ்சுக்காரங்க இல்ல.. ஆமீரகத்திடம் நேர்மையைக் காட்டிய சூரியகுமார்

Suryakumar Yadav 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 10ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய அமீரகம் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அலிசான் சராஃபு 22, கேப்டன் முகமது வாசிம் 19 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா 4.3 ஓவரில் 60/1 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 30, சுப்மன் கில் 20*, கேப்டன் சூரியகுமார் 7* ரன்கள் எடுத்தனர். அதனால் இந்தியா தங்களுடைய ஆசியக் கோப்பை பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

- Advertisement -

கல் நெஞ்சமற்ற இந்தியா:

முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் விளையாடி அமீரக அணி இந்தியாவுக்கு எதிராக எதிர்பார்த்தது போலவே திண்டாட்டமாக பேட்டிங் செய்தது. அதனால் 54/8 என சரிந்த அந்த அணிக்கு எதிராக சிவம் துபே 13ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட அமீரக பேட்ஸ்மேன் சித்திக் அடிக்க முயற்சித்து தவற விட்டார்.

அதைப் பிடித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை ஸ்டம்ப் மேலே எறிந்து அவுட் கேட்டார். குறிப்பாக பேட்ஸ்மேன் எல்லைக்கோட்டை விட்டு வெளியே வந்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் சாம்சன் ஸ்டம்பிங் முறையில் அவுட் கேட்டார். அதை 3வது நடுவர் சோதிக்கையில் ஸ்டம்ப் மேலே பந்து படும் போது சித்திக் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே நின்றது தெரிய வந்தது.

- Advertisement -

நிரூபித்த சூரியகுமார்:

குறிப்பாக “பந்தை வெள்ளைக்கோட்டுக்குள் நின்று அடித்த நாம் எப்படியும் அதற்குள் தான் நிற்போம்” என்ற எண்ணத்துடன் சித்திக் நின்றது தெளிவாக தெரிந்தது. ஆனால் விதிமுறைப்படி சித்திக் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே நின்றதால் அவுட் என்று 3வது நடுவர் அறிவித்தார். அப்போது பேட்ஸ்மேன் வேண்டுமென்றே தவறு செய்யாமல் கவனச் சிதறலால் வெள்ளைக்கோட்டிற்கு வெளியே நின்றார் என்று இந்திய கேப்டன் சூரியகுமார் கருதினர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை சந்திக்கவே இதை செஞ்சேன்.. அமீரகத்தை ஈஸியா இந்தியா சாய்க்க இதான் காரணம்.. சூரியகுமார்

எனவே அப்படிப்பட்ட விக்கெட் தேவையில்லை என்று கருதிய சூர்யகுமார் அம்பயரிடம் சென்று தங்களுடைய முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனால் சித்திக் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்கிய சூரியகுமாருக்கும் இந்திய அணிக்கும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். சூரியகுமாரின் அந்த நெகிழ்ச்சியான செயல் “அப்பாவித்தனத்தால் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே நின்ற பேட்ஸ்மேனின் விக்கெட்டை கேட்டு வாங்கும் அளவுக்கு இந்தியர்கள் கல்நெஞ்சகாரர்கள் கிடையாது” என்பதை நிரூபிப்பதாகவும் அமைந்தது.

Advertisement