இந்திய அணியில் ஆன்லைன் ஃபேன்ஸ் க்ளப் இல்லாத.. அவர் அதிக பாராட்டுக்கு தகுதியானவர்.. சேவாக் கருத்து

Virender Sehwag 6
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முகமது ஷமி, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத போதிலும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களை வைத்து இத்தொடரை இந்தியா வென்றுள்ளது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

முன்னதாக இந்த தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் தன்னுடைய முதல் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் அரை சதமடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதை விட ராஞ்சியில் நடைபெற்ற 4வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 177/7 என இந்தியா தடுமாறிய போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து 90 ரன்கள் அடித்த துருவ் ஜுரேல் 2வது இன்னிங்ஸில் 39* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

ஆன்லைன் ஃபேன்ஸ் இல்ல:
அப்போது ஊடகங்களில் எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் அபாரமான திறமையை பயன்படுத்தி கடினமான சூழ்நிலையில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி துருவ் ஜுரல் இந்தியாவை காப்பாற்றியதாக முன்னாள் வீரேந்திர சேவாக் ட்விட்டரில் பாராட்டினார். அதற்கு சர்பராஸ் கானை குத்திக்காட்டி சேவாக் இப்படி பாராட்டுவதாக நிறைய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தனர்.

ஆனால் அப்போது யாரையும் இழிவுப்படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை என்று தெரிவித்த சேவாக் அனைத்து இந்திய வீரர்களையும் சமமாக கொண்டாடுங்கள் என்று தம்மை விமர்சித்த ரசிகர்களுக்கு பதிலளித்தார். இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிலேயே குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறுவதில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“மிகைப்படுத்துதல் என்று வரும் போது குல்தீப் யாதவ் மிகவும் குறைபாக மிகைப்படுத்தப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்காக நன்றாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு எப்போதும் ஆன்லைன் ஃபேன்ஸ் கிளப் இல்லை. அல்லது மக்கள் யாரும் இவர் தான் அடுத்த பெரிய ஸ்டார் என்று கொண்டாடியதில்லை. என்னைக் கேட்டால் தற்போது பெறுவதை விட அவர் அதிக பாராட்டு மற்றும் மிகைப்படுத்தலுக்கு தகுதியானவர்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பவிருக்கும் பும்ரா – அவருக்கு பதிலா வெளியேறப்போவது யார் தெரியுமா?

அவர் கூறுவது போல 4வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரேலுடன் சேர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த குல்தீப் யாதவ் 28 ரன்கள் அடித்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் ரோகித் சர்மா முதல் ஜெய்ஸ்வால் வரை இந்திய அணியில் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களுக்கு சமூக வலைதளங்களில் கிடைக்கும் பாராட்டு அவருக்கு கிடைப்பதில்லை என்றால் மிகையாகாது.

Advertisement