2023 உலக கோப்பையின் சிறந்த பந்தை வீசி சாய்ச்சுட்டாரு.. இந்திய பவுலருக்கு பால் காலிங்வுட் பாராட்டு

Paul Collingwood
Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்த உதவியுடன் 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதையும் எட்ட விடாத அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்களையும் எடுத்து இங்கிலாந்தை 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு சுருட்டி இந்தியா வெற்றி பெற உதவினர். அதனால் 6 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

- Advertisement -

சிறந்த பந்து:
அந்த வகையில் இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கு பவுலர்கள் தான் முக்கியமான காரணமாக இருந்தார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் பும்ரா, ஷமி உள்ளிட்ட அனைத்து இந்திய பவுலர்களும் துல்லியமான லென்த் பந்துகளை வீசி இங்கிலாந்தை வீழ்த்தியதாக முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக சரிந்த இங்கிலாந்தை காப்பாற்ற நங்கூரத்தை போட முயன்ற ஜோஸ் பட்லரை இத்தொடரின் சிறந்த பந்தை வீசி குல்தீப் யாதவ் போல்டாக்கியதாகவும் அவர் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் இந்திய பவுலர்கள் பந்து வீசியதை பார்த்த பின் வாவ் என்று சொல்லத் தோன்றியதல்லாவா? குறிப்பாக சொல்வதற்கு எதுவுமில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய பவுலர்கள் துல்லியமான லென்த்தை வீசி அசத்தினார்கள். அவர்கள் முதல் விக்கெட்டை எடுத்ததும் மைதானத்தில் இருந்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்”

- Advertisement -

“அதை நீங்கள் தொலைக்காட்சியில் கேட்கும் போது கூட அற்புதமான சூழ்நிலையாக இருக்கும். சொல்லப்போனால் இந்திய ரசிகர்கள் அவர்களது அணிக்கு 12வது வீரரை போல் இருக்கின்றனர். முதல் விக்கெட்டை எடுத்த பின் அவர்கள் இங்கிலாந்து மூச்சு வாங்குவதற்கு கூட இடம் கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசினார்கள். இவை அனைத்தும் இது போன்ற நல்ல பிட்ச்சில் உங்களுடைய நுணுக்கங்களை பயன்படுத்தி துல்லியமாக செயல்படுவதை பொறுத்ததாகும்”

இதையும் படிங்க: 87 ரன் அடிச்சது மேட்டர் இல்ல. ரோஹித் சர்மாவின் இந்த பயமற்ற முடிவே வெற்றிக்கு காரணம் – ரவி சாஸ்திரி பாராட்டு

“வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து ஸ்பின்னர்கள் அசத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதே போல குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பையின் சிறந்த பந்துடன் வந்து ஜோஸ் பட்லரை அவுட்டாக்கினார்” என்று கூறினார். அவர் கூறுவது போல குல்தீப் யாதவ் வீசிய பந்து பிட்ச்சில் பட்டதும் 7.4 டிகிரி திடீரென சுழன்று பட்லருக்கு ஆச்சரியத்தை கொடுத்து ஸ்தம்பை பதம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement