அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அமர்க்களம் செய்த குல்தீப் யாதவ் – அப்துர் ராசாக்கின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை

Abdur Razzaq
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமாக செயல்பட்டு 49. 1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே எடுத்தது அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 53 (48) ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக 20 வயதில் மாயாஜாலம் செய்த துணித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 214 ரன்கள் என்ற இலக்கை சேசிங் செய்த இலங்கைக்கு நிசாங்கா 6, கருணரத்னே 2, குசால் மெண்டிஸ் 15, சமரவிக்கிரமா 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினார். அதனால் 99/6 என சரிந்த அந்த அணிக்கு தனஞ்செயா டீ சில்வா 41 ரன்களும் வெல்லாலகே 42* ரன்களும் எடுத்துப் போராடிய போதிலும் 41.3 ஓவரில் இலங்கையை 172 ரன்களுக்கு சுருட்டி வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதிவேகமான உலக சாதனை:
அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு இலங்கை வந்துள்ளது. இந்த வெற்றிக்கு 53 ரன்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா அட்டநாயகன் விருது வென்ற போதிலும் 9.3 ஓவரில் 43 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த குல்தீப் யாதவ் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக 214 என்ற குறைந்த இலக்கை கட்டுப்படுத்தும் போது மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அவர் சமரவிக்ரமா, அசலங்கா ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்களையும் பெரிய ரன்களை எடுக்க விடாமலும் ரஜிதா, பதிரனா போன்ற டெய்ல் எண்டர்களை சேதப்படுத்த விடாமலும் அவுட்டாக்கி வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியிலும் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் அழுத்தமான சூப்பர் 4 சுற்றின் 2 போட்டிகளில் 9 விக்கெட்களை எடுத்து அமர்க்களமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமாகி சைனாமேன் எனும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பின்பற்றி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பவராக இருக்கும் அவர் 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்ததால் கழற்றி விடப்பட்ட அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி கம்பேக் கொடுத்து தற்போது இந்திய அணியிலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட கிடைக்கும் வாய்ப்புகளில் ஜொலித்து வருகிறார்.

இதையும் படிங்க: கும்ப்ளே, ஹர்பஜன், அஷ்வின் என யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய – குல்தீப் யாதவ் (விவரம் இதோ)

அந்த வகையில் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக அபாரமான ஃபார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதை விட இந்த போட்டியில் எடுத்த 4 விக்கெட்டுகளையும் சேர்த்து இதுவரை 88 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்களை வீழ்த்திய இடது கை ஸ்பின்னர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (போட்டிகள்):
1. குல்தீப் யாதவ் : 88*
2. அப்துர் ரசாக் : 108
3. ப்ராட் ஹாக் : 118
4. சாகிப் அல் ஹசன் : 119
5. ரவீந்திர ஜடேஜா : 129

Advertisement