கும்ப்ளே, ஹர்பஜன், அஷ்வின் என யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய – குல்தீப் யாதவ் (விவரம் இதோ)

Kuldeep-Yadav
- Advertisement -

கொழும்பு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக 350 ரன்களுக்கு மேல் குவித்த இந்திய அணியானது இம்முறை இலங்கை அணிக்கு எதிராக 213 ரன்களை மட்டுமே அடித்திருந்தாலும் சிறப்பான பந்துவீச்சின் மூலம் இலங்கை அணியை சுருட்டி வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவர்களில் 213 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியை 40.3 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 9.3 ஓவர்களில் 43 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றிக்கு அவரது இந்த சிறப்பான பந்துவீச்சும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் இந்த போட்டியில் எடுத்த நான்கு விக்கெட்டுகளோடு சேர்த்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs SL : தோல்வி அடைந்தாலும் இலங்கை வீரருக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருது. என்ன காரணம்? – அவர் பேசியது என்ன?

அந்த வகையில் இந்திய அணியின் சுழற்ப்பந்து வீச்சாளராக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அதோடு உலக அளவில் சக்லைன் முஷ்டாக், ரஷீத் கான், அஜந்தா மெண்டிஸ் ஆகியோருக்கு அடுத்து நான்காவது வீரராக குல்தீப் யாதவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை 88 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement