94 ரன்ஸ் 6 விக்கெட்ஸ்.. மாயாஜாலத்தால் இங்கிலாந்தை சரித்த குல்தீப் யாதவ்.. அக்சர் படேலை முந்தி புதிய அதிவேக சாதனை

Kuldeep Yadav 2
- Advertisement -

தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி துவங்கியது. அதில் ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் டக்கெட் 27 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார்.

அப்போது வந்த ஓலி போப் 11 ரன்களில் ஸ்டம்ப்பிங் முறையில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி மிகச் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். ஆனால் அவரையும் 79 ரன்களில் இருந்த போது 10.9 டிகிரி சுழலும் அளவுக்கு மாயாஜால பந்தை வீசி கிளீன் போல்ட்டாக்கிய குல்தீப் 100வது போட்டியில் களமிறங்கி அதிரடியாக விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவையும் 29 (18) ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

குல்தீப் மேஜிக்:
அதனால் 175/4 என சரிவை சந்தித்த இங்கிலாந்துக்கு மற்றொருபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த ஜோ ரூட் 26 ரன்களில் ஜடேஜா சுழலில் அவுட்டானார். அதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தை பயன்படுத்தி அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை டக் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை மொத்தமாக இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.

மேலும் இதுவரை 12 ரெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 51 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். குறிப்பாக 1871 பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ள குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற அக்சர் படேல் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் அக்சர் படேல் 2205 பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

தற்போது அவர் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ள நிலையில் 2465 பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்து பும்ரா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இதற்கு அடுத்ததாக வந்த டாம் ஹார்ட்லி 6, மார்க் வுட் 0 ரன்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக நடைபெற்றுள்ள அரிதான நிகழ்வு.. தேவ்தத் படிக்கல் அறிமுகமானதால் ஏற்பட்ட அற்புதம்

அதனால் முதல் நாள் தேனீர் இடைவேளையில் இங்கிலாந்து 194/8 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. அந்த அணிக்கு களத்தில் பென் போக்ஸ் 8*, சோயப் பசீர் 5* ரன்களுடன் உள்ளனர். குறிப்பாக 100/2 என்ற நல்ல நிலையில் இருந்த இங்கிலாந்தை உணவு இடைவெளிக்கு பின் 94 ரன்கள் மட்டும் கொடுத்த இந்தியா 6 விக்கெட்டுகள் எடுத்து இந்த போட்டியின் முதல் நாளிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement