இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக நடைபெற்றுள்ள அரிதான நிகழ்வு.. தேவ்தத் படிக்கல் அறிமுகமானதால் ஏற்பட்ட அற்புதம்

Padikkal
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இந்தத் தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இன்று மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரஜத் பட்டிதார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியுள்ள தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்திய அணி படைத்த சாதனை யாதெனில் : இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக அறிமுக வீரராக ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கானுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

மேலும் அதே போட்டியில் மற்றொரு வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ராஞ்சி நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டதால் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அறிமுகமாகியிருந்தார்.

இதையும் படிங்க : 10.9 டிகிரி சுழன்ற மாஸ் பந்து.. சர்ப்ராஸ் கான் பேச்சை கேட்காத ரோஹித்.. தவறை சரியாக்கி மிரட்டும் குல்தீப்

இப்படி நான்கு வீரர்கள் ஒரே டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இருந்த வேளையில் இன்று தரம்சாலா நகரில் தொடங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல்க்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படி ஒரே தொடரில் 5 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமானது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement