10.9 டிகிரி சுழன்ற மாஸ் பந்து.. சர்ப்ராஸ் கான் பேச்சை கேட்காத ரோஹித்.. தவறை சரியாக்கி மிரட்டும் குல்தீப்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் காலை 9.30 மணிக்கு துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி சற்று அதிரடியாக விளையாடிய நிலையில் பென் டக்கெட் நிதானமாக விளையாடினார்.

அந்த வகையில் 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்த இந்த ஜோடியில் பென் டக்கெட்டை 27 ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அடுத்ததாக வந்த ஒலி போப்பையும் 11 ரன்களில் மாயாஜால சுழலால் ஸ்டம்பிங் முறையில் காலி செய்தார். ஆனாலும் எதிர்ப்புறம் அசத்தலாக விளையாடிய ஜாக் கிராவ்லி அடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

10.9 டிகிரி மாஸ் சுழல்:
அப்போது குல்தீப் யாதவ் வீசிய 26வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட அவர் எட்ஜ் கொடுத்தார். அது விக்கெட் கீப்பர் துருவ் ஹுரேல் கைகளில் பட்டு ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த சர்பராஸ் கானை நோக்கி சென்றது. அதை சரியாக பிடித்த சர்பராஸ் கான் அவுட் கேட்டும் களத்தில் இருந்த நடுவர் கொடுக்கவில்லை. அதனால் கேப்டன் ரோகித் சர்மாவிடம் ரிவியூ எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் துருவ் ஜுரேல் உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்கள் உறுதியாக சொல்லாததால் சர்பராஸ் பேச்சை கேட்காத ரோகித் சர்மா ரிவியூ எடுக்கவில்லை. ஆனால் பின்னர் பெரிய திரையில் பார்த்த போது ஜாக் கிராவ்லி எட்ஜ் கொடுத்தது தெளிவாகத் தெரிந்ததால் தன்னுடைய தவறை உணர்ந்த ரோகித் சர்மா சிரித்து மழுபினார். மறுபுறம் அதை பயன்படுத்தி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட ஜாக் கிராவ்லி 79 ரன்கள் கடந்து நன்கு செட்டிலானார்.

- Advertisement -

அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை 38வது ஓவரிரின் 2வது பந்தில் மாயாஜாலம் செய்த குல்தீப் யாதவ் க்ளீன் போல்ட்டாக்கி பெவிலியன் அனுப்பி வைத்தார். குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்புக்கு நன்றாக வெளியே பிட்ச் செய்து குல்தீப் யாதவ் வீசிய பந்து தரையில் பட்டதும் அப்படியே 10.9 டிகிரி அளவுக்கு திரும்பி ஸ்டம்ப்பில் அடித்து ஜாக் கிராவ்லியை க்ளீன் போல்ட்டாக்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: வரலாற்று சிறப்புமிக்க நாள்.. 100வது டெஸ்டில் பாகுபாடுன்றி அஸ்வினுடன் சேர்த்து பேர்ஸ்டோவையும் வாழ்த்திய ஜாம்பவான் சச்சின்

அந்த வகையில் ரோகித் சர்மாவின் தவறை சரி செய்த குல்தீப் யாதவ் அடுத்ததாக தன்னுடைய 100வது போட்டியில் களமிறங்கி அதிரடியாக விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவையும் 29 (18) ரன்களில் காலி செய்தார். அதனால் சற்று முன் வரை இங்கிலாந்து 175/5 என தடுமாறும் இங்கிலாந்து அணிக்கு களத்தில் ஜோ ரூட் 16 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

Advertisement