வரலாற்று சிறப்புமிக்க நாள்.. 100வது டெஸ்டில் பாகுபாடுன்றி அஸ்வினுடன் சேர்த்து பேர்ஸ்டோவையும் வாழ்த்திய ஜாம்பவான் சச்சின்

- Advertisement -

இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தரம்சாலா நகரில் மார்ச் 7ஆம் தேதி துவங்கியது. அதில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 100வது போட்டியில் களமிறங்கி சாதனை படைத்தார். கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளிய அவர் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்து நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

மேலும் 500 விக்கெட்டுகளை வேகமாக எடுத்த இந்திய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அவர் தற்போது 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அந்த வகையில் இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு வரும் அவருக்கு 100வது போட்டியில் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஸ்பெஷல் தொப்பியை பரிசளித்து கௌரவித்தார்.

- Advertisement -

பாராட்டிய சச்சின்:
அதை தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து வாங்கிய அஸ்வின் 100வது கௌரவத் தொப்பியை தனது செல்ல மகள்களின் கைகளில் கொடுத்து அழகு பார்த்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் இருபக்கமும் நின்று கைதட்டி பாராட்டி வரவேற்ற நிலையில் கேப்டன் ரோகித் சர்மா அணியை முன்னிலைப்படுத்தும் கௌரவத்தை அஸ்வினுக்கு வழங்கினார்.

மறுபுறம் இதே நாளில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவும் தன்னுடைய 100வது போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். இதுவரை 99 போட்டிகளில் 5974 ரன்களை எடுத்து சமீப காலங்களில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளையாடி வரும் அவருக்கு 100வது தொப்பியை ஜோ ரூட் பரிசளித்து கௌரவித்தார்.

- Advertisement -

அதை தன்னுடைய குடும்பத்தினருக்கு முன்னிலையில் கலங்கிய கண்களுடன் வாங்கிய ஜானி பேர்ஸ்டோவுக்கு பின்னர் இந்திய வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் 100வது போட்டியில் விளையாடும் அந்த 2 வீரர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இப்போ மட்டும் சுகமா இருக்கா? விக்கெட் பறிபோன கடுப்பில் பென் ஸ்டோக்ஸை விளாசும் இந்திய ரசிகர்கள்

“இது தரம்சாலாவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களுடைய சர்வதேச டெஸ்ட் ஜெர்சியை 100வது முறையாக அணிந்துள்ளனர். இது டெஸ்ட் கிரிக்கெட் மீதான அவர்களின் ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை பற்றி பேசும் நம்ப முடியாத சாதனை. இருவரும் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement