இப்போ மட்டும் சுகமா இருக்கா? விக்கெட் பறிபோன கடுப்பில் பென் ஸ்டோக்ஸை விளாசும் இந்திய ரசிகர்கள்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தரம்சாலா நகரில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா ஏற்கனவே இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்று விட்டது.

அதனால் இந்த கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய துவங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

போராடும் இந்தியா:
அதில் பென் டக்கெட் சற்று நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் ஜாக் கிராவ்லி அதிரடியாக விளையாடினார். அப்போது முகமது சிராஜ் வீசிய ஒரு பந்தை அடிக்க தவறிய அவர் காலில் வாங்கினார். அதனால் எல்பிடபிள்யூ முறையில் இந்திய அணியினர் அவுட் கேட்டனர். இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து இந்திய அணியினர் ரிவியூ செய்தனர்.

அதை சோதித்துப் பார்த்த போது பந்து லெக் ஸ்டம்ப் மீது லேசாக உரசிய பந்து முழுமையாக அடிக்கவில்லை. அதன் காரணமாக களத்தில் இருந்த நடுவர் கொடுத்த “அம்பையர்ஸ் கால்” அழைப்பை வைத்து 3வது நடுவரும் இந்தியாவுக்கு அவுட் கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் இதே ஜாக் கிராவ்லிக்கு 2, 3வது போட்டியில் எல்பிடபிள்யூ முறையில் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்தார்.

- Advertisement -

அதை ஜாக் கிராவ்லி ரிவியூ செய்த போது ஸ்டம்ப் மீது முழுமையாக அடிக்காமல் லேசாக உரசிக்கொண்டு சென்றது. அதனால் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்ததால் “அம்பயர்ஸ் கால்” அழைப்பை வைத்து 3வது நடைபெறும் அதே தீர்ப்பை வழங்கினார். ஆனால் அப்போது அந்த தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததாகவும் டெக்னாலஜி 100% சரியாக இல்லை என்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க: காவ்யா மாறன் இல்ல.. ஹைதராபாத் கேப்டனாக ஐடென் மார்க்ரம் நீக்கப்பட காரணம் அவர் தான்.. ஏபிடி அதிருப்தி

இருப்பினும் தற்போது அதே டெக்னாலஜி அதே ஜாக் கிராவ்லிக்கும் இங்கிலாந்துக்கும் சாதகமான தீர்ப்பை கொடுத்துள்ளது. அதனால் “இப்போது மட்டும் சுகமாக உள்ளதா” என்று பென் ஸ்டோக்ஸை இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பென் டக்கெட்டை 27 ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அடுத்து வந்த ஓலி போப்பையும் 11 ரன்களில் காலி செய்தார். அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் 100/2 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்துக்கு அம்பயர்ஸ் கால் உதவியுடன் தப்பிய ஜாக் கிராவ்லி அரை சதமடித்து 61* ரன்களுடன் களத்தில் சவாலை கொடுத்து வருவது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது.

Advertisement