காவ்யா மாறன் இல்ல.. ஹைதராபாத் கேப்டனாக ஐடென் மார்க்ரம் நீக்கப்பட காரணம் அவர் தான்.. ஏபிடி அதிருப்தி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை கழற்றி விட்டு ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 டி20 தொடரில் ஐடென் மார்க்ரம் தலைமையில் ஹைதெராபாத் அணியின் கிளையான ஈஸ்டர்ன் கேப் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றது.

அதன் காரணமாக கேன் வில்லியம்சனுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவருடைய தலைமையில் 2023 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடிய ஹைதராபாத் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த நிலையில் 2024 எஸ்ஏ20 டி20 தொடரில் மீண்டும் அவரது தலைமையில் ஈஸ்டர்ன் கேப் அணி 2வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

- Advertisement -

ஏபிடி அதிருப்தி:
அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்த பட் கமின்ஸை ஹைதராபாத் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ஹைதராபாத் அணியின் முதன்மை உரிமையாளரான காவ்யா மாறன் முக்கிய காரணமாக இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் சமீபத்திய வருடங்களில் அவர் தான் பட் கமின்ஸ் உட்பட பல வீரர்களை பெரிய தொகைக்கு வாங்குவதும் கழற்றி விடுவதுமாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஐடன் மார்க்ரம் நீக்கப்பட்டு பட் கமின்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு நியூஸிலாந்து முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி தான் காரணம் என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பலரும் ஆச்சரியப்படும் வகையில் பட் கமின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் காரணம் இருக்கிறது. இருப்பினும் அவருக்கு வழி விடுவதற்காக ஐடன் மார்க்ரம் நீக்கப்பட்டுள்ளது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக எஸ்ஏ20 தொடரில் அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற பின்பும் ஐடன் மார்க்ரம் நீக்கப்பட்டுள்ளார். ஹைதெராபாத் அணியிலும் பயன்படுத்தப்பட்ட அவர் சிறந்த கேப்டன் என்று நினைக்கிறேன். எனவே அவர் நீக்கப்பட்டது எனக்கும் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகும்”

“இருப்பினும் இது ஹைதராபாத் அணியின் நன்மைக்கு என்றால் அப்படியே இருக்கட்டும். அந்த இந்த முடிவில் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக இருக்கும் டேனியல் வெட்டோரி சம்பந்தப்பட்டிருப்பார் என்பதால் எனக்கு ஆச்சரியமும் இல்லை. அதே போல ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் இந்த முடிவில் சம்பந்தப்பட்டிருக்கலாம். அந்த வகையில் ஆஸ்திரேலியர்களின் சுவை ஹைதராபாத் அணிலும் தற்போது வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement