மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற 41-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா கடும் போராட்டத்திற்குப் பின் 20 ஓவர்களில் 146/9 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 4 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்து காப்பாற்றுவார் என பெரிதும் நம்பப்பட்ட காட்டடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அந்த நிலைமையில் நித்திஷ் ராணா பொறுப்புடன் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 57 (34) ரன்களும் ரின்கு சிங் அதிரடியாக 23 (16) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்கள். டெல்லி சார்பில் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
டெல்லி நிம்மதி:
அதை தொடர்ந்து 147 என்ற சுலப இலக்கை துரத்திய டெல்லிக்கு முதல் பந்திலேயே பிரிதிவி ஷா கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 13 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக 8 பவுண்டரிகளுடன் 42 (26) ரன்கள் எடுத்து சரிய விடாமல் பார்த்துக் கொண்டார். ஆனாலும் லலித் யாதவ் 22 (29) ரிஷப் பண்ட் 2 (5) போன்ற முக்கிய வீரர்கள் நடுவரிசையில் சொதப்பியதால் பின்னடைவை சந்தித்த டெல்லிக்கு இறுதியில் அக்சர் பட்டேல் அதிரடியாக 24 (17) ரன்களும் ரோவ்மன் போவல் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 33* (16) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19 ஓவர்களில் 150/6 ரன்கள் எடுத்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.
இந்த வெற்றியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறி நிம்மதி அடைந்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்து போராடிய போதிலும் இதர பவுலர்கள் கைகொடுக்க தவறியதால் 9 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த கொல்கத்தா 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
குல்ச்சா இஸ் பேக்:
இந்த வெற்றிக்கு வெறும் முத்தாக 3 ஓவர்கள் வீசினாலும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து ஆண்ட்ரே ரசல் உட்பட 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த வருடம் டெல்லி இதுவரை பதிவு செய்துள்ள 4 வெற்றிகளிலும் அவர் மட்டுமே ஆட்டநாயகன் விருதை வென்று ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்களை காட்டிலும் டெல்லியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
Tough times don't last tough people do. And these two are as tough as they come. So good to see KulCha back in form together 😊 #KKRvDC #IPL2022 pic.twitter.com/4bJTdTj8cI
— Wasim Jaffer (@WasimJaffer14) April 28, 2022
From 2018 to 2022, the KulCha supremacy is back! 💥#IPL2022 pic.twitter.com/gcHrmglb2Q
— Omkar Mankame (@Oam_16) April 29, 2022
இத்துடன் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்களை அள்ளியுள்ள அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்து ஊதா நிற தொப்பிக்கு போட்டி போட்டு வருகிறார். ஆனால் போட்டிக்கு முதல் இடத்தில் யார் இருக்கிறார் என்று பார்த்தால் அவரின் நண்பரான ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் மற்றொரு இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் யூஸ்வென்ற சஹால் 18 (8) விக்கெட்டுகளுடன் உள்ளார். இப்படி இந்தியாவின் முக்கிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான செயல்பாடுகளால் ஊதா தொப்பிக்கு போட்டி போடுவது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
பாசமழை:
ஏனெனில் 207 – 2019 ஆகிய காலகட்டங்களில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சில் ஜோடியாக உருவெடுத்த இவர்கள் இதேபோல அபாரமாக பந்துவீசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வந்தார்கள். அதன் காரணமாக “குல்ச்சா” என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இந்த ஜோடியின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டதால் 2019 உலக கோப்பைக்கு பின் ஒன்றாக சேர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தது. அத்துடன் 2021 டி20 உலக கோப்பையில் இந்த இருவரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு இந்திய அணியிலிருந்து தூரம் சென்ற இவர்கள் தற்போது மீண்டும் அதே பழைய ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளனர்.
Kul kul kul kuldeeeeeeeeeeeeepppp 🔥🔥 champion ❤️🤗 #IPL2022 #KKRvDC
— Yuzvendra Chahal (@yuzi_chahal) April 28, 2022
Chahalllll 🔥🔥🔥@yuzi_chahal ♥️
— Kuldeep yadav (@imkuldeep18) April 18, 2022
அதிலும் இந்த வருடம் இந்த இருவரும் தங்களது அணிக்கான போட்டியில் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பாராட்டி பாசமழை பொழிந்து வருகின்றனர். அதைவிட முதலிடத்தில் உள்ள சஹாலை முந்தி ஊதா தொப்பியை வாங்க முயற்சிப்பீர்களா என்று நேற்றைய போட்டி முடிந்த பின் ஹர்ஷா போக்லே எழுப்பிய கேள்விக்கு குல்தீப் யாதவ் பதிலளித்தது பின்வருமாறு :
இதையும் படிங்க : எப்பா இவ்வளவு கோபமா? தனக்கு கொடுமை செய்த அணியை 2 முறையாக பழிவாங்கிய குல்தீப் யாதவ் – என்ன நடந்தது?
“சஹாலுடன் எப்போதும் எனக்கு போட்டி இல்லை. நான் காயமடைந்த கடினமான தருணங்களில் அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். எனவே ஊதா தொப்பியை அவர் வெல்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார். மொத்தத்தில் பழைய ஃபார்முக்கு திரும்பி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் காண்பிக்கும் இந்த குல்ச்சா ஜோடி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் ஜோடியாக விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.