எப்பா இவ்வளவு கோபமா? தனக்கு கொடுமை செய்த அணியை 2 முறையாக பழிவாங்கிய குல்தீப் யாதவ் – என்ன நடந்தது?

Kuldeep Yadhav vs KKR 2.jpeg
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற 41-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் வெறும் 146/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஆரோன் பின்ச் 3 (7) வெங்கடேஷ் ஐயர் 6 (6) பாபா இந்திரஜித் 6 (8) சுனில் நரேன் 0 (1) போன்ற டாப் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 35/4 என ஆரம்பத்திலேயே அந்த அணி திணறியது.

Shreyas Iyer vs DC

அந்த சரிவை சரிசெய்ய முயன்ற அதன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரி உட்பட 42 (37) ரன்களில் ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரசல் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த இக்கட்டான நிலைமையில் அதிரடி காட்டிய நித்திஷ் ராணா 3 பவுண்டரி 4 சிக்சர்கள் 57 (34) ரன்களும் இறுதியில் ரின்கு சிங் 23 (16) ரன்களும் எடுத்து கொல்கத்தாவை ஓரளவு காப்பாற்றினார்கள். டெல்லி சார்பில் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

டெல்லி 4-வது வெற்றி:
அதை தொடர்ந்து 147 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு முதல் ஓவரின் முதல் பந்திலே அதை வீசிய உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்த பிரதிவி ஷா கோல்டன் டக் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த மிச்செல் மார்ஷ் 13 (7) ரன்களில் நடையைக் கட்டினார். அதனால் 17/2 என அந்த அணியும் ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக 8 பவுண்டரி உட்பட 42 (26) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றி ஆட்டமிழந்தார். அப்போது இளம் வீரர் லலித் யாதவ் 22 (29) ரன்களிலும் கேப்டன் ரிஷப் பண்ட் 2 (5) ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டானதால் டெல்லியின் எளிதான வெற்றி கேள்விக்குறியானது.

Kuldeep Yadhav vs KKR

இருப்பினும் கடைசி நேரத்தில் அக்ஷர் பட்டேல் அதிரடியாக 24 (17) ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவெல் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 33* (16) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 19 ஓவரிலேயே 150/6 ரன்கள் எடுத்த டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் நல்ல வெற்றியைப் பெற்றது. கொல்கத்தா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சுழற்றும் குல்தீப் யாதவ்:
இந்த வெற்றியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி புள்ளி பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பந்துவீச்சிலும் சொதப்பிய கொல்கத்தா பங்கேற்ற 9 போட்டிகளில் 6-வது வெற்றி தோல்வியை பதிவு செய்து 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த வெற்றிக்கு வெறும் 3 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்கள் சாய்த்த குல்திப் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதிலும் நேற்றைய போட்டியில் அற்புதமாக பந்துவீசிய அவரை பார்த்த ரசிகர்கள் அவரின் முன்னாள் அணியான கொல்கத்தா மீது அவருக்கு இவ்வளவு கோபமா என்று வாய்மேல் கை வைக்கிறார்கள்.

kuldeep 1

ஏனெனில் 2016 – 2021 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடி இதேபோல் நிறைய விக்கெட்டுகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்த அவர் 2019ஆம் ஆண்டு வாக்கில் முதல் முறையாக பார்மை இழந்து தவித்தார். அந்த வருடம் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவருக்கு அதற்கு அடுத்த வருடத்தில் 5 போட்டிகளில் மட்டும் வாய்ப்பளித்து எஞ்சிய போட்டிகளிலும் 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியிலும் பெஞ்சில் அமர வைத்தது. மேலும் அதுபோன்ற தருணங்களில் வாய்ப்பும் கொடுக்காமல் வெளியேவும் விடாமல் ஒரு வேலைக்காரனை போல் அணிக்குள் அந்த அணி நிர்வாகம் நடத்தியதாக குல்தீப் யாதவ் பயிற்சியாளர் கபில் பாண்டே சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

- Advertisement -

2-வது முறையாக பழிக்குபழி:
அந்த நிலைமையால் இந்திய அணியிலும் அவரது இடம் பறிபோன நிலைமையில் 2021 ஐபிஎல் தொடரின் 2-வது பகுதியில் காயத்தால் விலகினார். அதன்பின் குணமடைந்த அவரை ஒருவழியாக கொல்கத்தா அணி நிர்வாகம் கழற்றிவிட 5 கோடிக்கும் மேல் செல்ல வேண்டிய அவரை டெல்லி அணி நிர்வாகம் 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு நம்பி வாங்கியது. தற்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வரும் குல்தீப் யாதவ் முதல் 8 போட்டியிலேயே 17 விக்கெட்டுகளை எடுத்து அதே பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

குறிப்பாக ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் முறையாக தனது முன்னாள் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் முதல் போட்டியிலேயே பழிக்கு பழி வாங்கினார். அந்த நிலைமையில் நேற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்து 2-வது முறையாக தனது முன்னாள் அணியை பழிக்குப் பழி வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க : அவரை ஏன் லேட்டா பேட்டிங் இறக்குறீங்க. கொல்கத்தா அணி பண்ணும் தப்பே இதுதான் – சுனில் கவாஸ்கர் வெளிப்படை

அதைவிட ஆச்சரியம் என்னவெனில் டெல்லி இதுவரை பதிவு செய்த 4 வெற்றிகளிலும் குல்தீப் யாதவ் தான் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். மொத்தத்தில் கொல்கத்தா வேண்டாம் என்று கொடுமைப்படுத்தி ஒதுக்கிய குல்தீப் யாதவ் இன்று அவரை நம்பி வாங்கிய டெல்லிக்கு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

Advertisement