அவரை ஏன் லேட்டா பேட்டிங் இறக்குறீங்க. கொல்கத்தா அணி பண்ணும் தப்பே இதுதான் – சுனில் கவாஸ்கர் வெளிப்படை

Gavaskar
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த சில போட்டிகளாகவே தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் கொல்கத்தா அணியானது நேற்றைய போட்டியிலும் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது ஐந்தாவது தோல்வியினை பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்காதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Shreyas Iyer vs DC

- Advertisement -

ஏனெனில் நேற்றைய போட்டியில் துவக்க வீரர் ஆரோன் பின்ச் 3 ரன்களிலும், வெங்கடேச ஐயர் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் மிடில் ஆர்டரில் பாபா அபராஜித் 6 ரன்களிலும், சுனில் நரைன் மற்றும் ரசல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். டெல்லி அணி சார்பாக குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் கைப்பற்றி கொல்கத்தா அணியை முற்றிலும் முடக்கினார் என்றே கூறலாம்.

இப்படி கொல்கத்தா அணியின் வீரர்கள் ஒருபுறம் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தாலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒருபுறம் தாக்குப்பிடித்து 42 ரன்களையும், நிதிஷ் ராணா 57 ரன்களையும் குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146 ரன்கள் குவித்தது.

Nitish Rana

பின்னர் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியானது 19-வது ஓவரின் முடிவில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் இந்த சரிவிற்கு அவர்கள் நிதீஷ் ராணாவை முன்கூட்டியே களமிறக்காதது தான் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நிதீஷ் ராணா நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். அவரை ஏன் ஆறாவது வீரராக களமிறக்க வேண்டும். ஏற்கனவே அணியில் பினிஷராக ரசல் இருக்கிறார். அப்படியிருக்கையில் நிதீஷ் ராணாவிற்கு முன்கூட்டியே களமிறங்க வாய்ப்பை வழங்க வேண்டும். ஆனால் கொல்கத்தா அணி அதை செய்ய தவறி வருகின்றனர்.

இதையும் படிங்க : பயமறியா இளம் கன்றுகள்! ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் விளாசிய டாப் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ஏனெனில் 3-வது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கும் பட்சத்தில் 4-வது வீரராக ராணா விளையாடினால் நிச்சயம் அது பெரிய ரன் குவிப்புக்கு இட்டுச் செல்லும் அடித்தளமாக அமையும். ஆனால் அதை தவிர்த்து கொல்கத்தா அணி வீரர்களை மாற்றி மாற்றி பேட்டிங் ஆர்டரில் விளையாட வைப்பது அவர்களுக்கு ஏற்பட்ட சரிவுக்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement