எங்களாலும் முடியும்.. டிராவிட், ரோஹித் சொன்னா போதும்.. அதை செய்ய தயாரா இருக்கோம்.. பரத் பேட்டி

KS Bharat
- Advertisement -

வலுவான இந்திய கிரிக்கெட் அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடந்த அந்த போட்டியில் போட்டியில் ஆரம்பத்தில் இங்கிலாந்தை விட சிறப்பாக செயல்பட்ட இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் 196 ரன்கள் குவித்த ஓலி போப் இங்கிலாந்தை காப்பாற்றினார்.

அதை பயன்படுத்தி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்துக்கு டாம் ஹார்ட்லி 7 விக்கெட்கள் எடுத்து இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். எனவே ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா 2வது வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. இருப்பினும் அப்போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சொன்னா அடிப்போம்:
மறுபுறம் முதல் போட்டியிலேயே கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இந்திய அணியை அடுத்து வரும் போட்டிகளில் தோற்கடித்து தொடரை வெல்ல இங்கிலாந்து தயாராகியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் இந்திய அணி பதற்றமடையவில்லை என்று விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தோல்வியால் பதற்றமடைய வேண்டாம் என்று இந்திய அணி வீரர்களிடம் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ரோகித் மற்றும் டிராவிட் விரும்பினால் இங்கிலாந்து போலவே ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்து அதிரடியாக விளையாட இந்திய பேட்ஸ்மேன்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதல் போட்டிக்கு பின் எங்களுடைய அணியின் சூழ்நிலை ரிலாக்ஸாக இருந்தது. அவர்கள் எங்களை பதற்றமடைய வேண்டாம் என்று சொன்னார்கள். குறிப்பாக இந்த பெரிய தொடரில் இது வெறும் ஆரம்பம் என்று அவர்கள் சொன்னார்கள். நாங்களும் தோல்விக்காக பதறவில்லை. இது போல நாங்கள் நிறைய தொடர்களில் விளையாடியுள்ளோம். எனவே நாங்கள் அடுத்த போட்டியில் சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: விராட் கோலி என் மகன் மாதிரி.. நான் போய் அப்படிலாம் சொல்வேனா? பல்டி அடித்த சேட்டன் சர்மா

“முதல் போட்டிக்கு முன்பாக நாங்களும் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பதற்கான பயிற்சிகளை எடுத்தோம். இருப்பினும் களத்தில் அதை அடிப்பது பேட்ஸ்மேன்களின் தனிப்பட்ட திட்டமாகும். ஒருவேளை அணி நிர்வாகம் அது போல் விளையாடுவதை விரும்பினால் நாங்கள் அதை செய்வதற்கு தயாராக இருக்கிறோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் 2வது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement