விராட் கோலி என் மகன் மாதிரி.. நான் போய் அப்படிலாம் சொல்வேனா? பல்டி அடித்த சேட்டன் சர்மா

Chetan Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் சௌரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோர் வெவ்வேறு தலைமுறையின் மகத்தான வீரர்களாக போற்றப்படுகின்றனர். இருப்பினும் 2019ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்ற காலத்தில் விராட் கோலி மூன்று விதமான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போது இருதரப்பு தொடர்களை வென்ற விராட் கோலியால் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.

அதனால் விமர்சனங்கள் எழுந்த போது டி20 கேப்டன்ஷிப் பதவியை மட்டும் ராஜினாமா செய்வதாக அறிவித்த விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடர்வதாக தெரிவித்தார். ஆனால் அப்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

- Advertisement -

பல்டி அடித்த சேட்டன்:
அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தார். அப்படியே சில மாதங்கள் ஓடிய நிலையில் கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் விராட் கோலியுடன் ஏற்பட்ட ஈகோ சண்டை காரணமாகவே சௌரவ் கங்குலி அவரை கேப்டன்ஷிப் பதிவிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை நியமித்ததாக சேட்டன் சர்மா உண்மையை உளறினார்.

அத்துடன் விராட் கோலி மிகவும் திமிர் பிடித்தவர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தம்முடைய மகனைப் போன்ற விராட் கோலியை பற்றி நான் எப்படி அது அப்படி சொல்லியிருப்பேன் என்று சேட்டன் சர்மா புதிய பல்டி கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி என்னுடைய மகனைப் போன்றவர். அவர் மிகவும் இளமையானவர்”

- Advertisement -

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி அவரைப் பற்றி மோசமான கருத்துக்களை சொல்ல முடியும்? அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் தற்போது ஜாம்பவானாக உருவெடுத்துள்ளது எனக்கு பெரிய கொடுக்கிறது. அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடி 100 சதங்கள் அடிப்பார் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் முகம். அவர் மீண்டும் விளையாடுவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: டென்ஷன் வேண்டாம்.. அந்த வரலாற்றை மறக்காதீங்க.. முதல் டெஸ்ட் தோல்வி பற்றி சேட்டன் சர்மா கருத்து

முன்னதாக தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கி பல்வேறு உண்மைகளை உளறிய சேட்டன் சர்மா பின்னர் தாமாகவே தேர்வுக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல சௌரவ் கங்குலி கடந்த வருடத்துடன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். மறுபுறம் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய விராட் கோலி தற்போது பழைய ஃபார்முக்கு திரும்பி எதிரணிகளை பந்தாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement