டென்ஷன் வேண்டாம்.. அந்த வரலாற்றை மறக்காதீங்க.. முதல் டெஸ்ட் தோல்வி பற்றி சேட்டன் சர்மா கருத்து

Chetan Sharma
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக முதல் இன்னிங்சில் 190 முன்னிலையில் இருந்த இந்தியா 2வது இன்னிங்ஸில் வெறும் 202 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் வெற்றியை கோட்டை விட்டது.

அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா இத்தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது. இருப்பினும் அந்தப் போட்டியில் ஏற்கனவே விராட் கோலி விலகிய நிலையில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு முக்கியமான வீரர்கள் காயத்தால் விளையாட மாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

வரலாறு திரும்பும்:
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தற்காக ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் கேப்டன் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் 2021 சுற்றுப்பயணத்தில் சென்னையில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை அடுத்த 3 போட்டிகளில் தெறிக்க விட்ட இந்தியா 3 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அந்த வரலாற்றை மீண்டும் இந்திய அணி சொந்த மண்ணில் நிகழ்த்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியின் தோல்விக்காக டென்ஷன் தேவையில்லை. இப்போதும் நாம் 4 – 1 என்ற கணக்கில் வெல்வோம். முதல் போட்டியில் நாம் விருந்தினர்களை வரவேற்றோம் என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. சில நேரங்களில் நீங்கள் தவறு செய்வீர்கள்”

- Advertisement -

“சொல்லப்போனால் முதல் போட்டியில் இந்திய அணி தவறு செய்ததாக நான் சொல்ல மாட்டேன். அவர்கள் நன்றாகவே விளையாடினர். இருப்பினும் ஏதோ ஒரு வகையில் துவக்க போட்டியில் நாம் தோற்றோம். வெற்றி பெறுபவர் சாம்பியன் ஆகிறார் என்ற சொற்றொடர் உள்ளது. ஆனால் அது இங்கே இல்லை. இப்போதும் இத்தொடரில் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: வாழ்த்துக்கள் தம்பி.. ஆனா பெஞ்சில் தான் இருப்பிங்க ஏன்னா.. சர்பராஸ் வாய்ப்பு பற்றி இர்பான் பதான்

“3 வருடங்களுக்கு முன்பாக சென்னையில் நாம் இங்கிலாந்துக்கு எதிரான ஓப்பனிங் போட்டியில் தோற்றோம். அதன் பின் நாம் இங்கிலாந்தை தெறிக்க விட்டு 4 – 1 என்ற கணக்கில் வென்றோம். அதே போன்ற வரலாற்று இப்போதும் திரும்பும். அடுத்த போட்டியில் இந்தியா முற்றிலும் வித்தியாசமாக செயல்படும். என்னை பொறுத்த வரை அவர்கள் ஆக்ரோசமாக செயல்பட்டு 4 – 1 என்ற கணக்கில் இத்தொடரை வெல்வார்கள்” என்று கூறினார்.

Advertisement