IND vs AUS : கே.எல் ராகுலின் இடத்தை சுப்மன் கில் பிடிப்பாரா? – கே.எஸ் பரத் அளித்த பதில் இதோ

KL-Rahul-and-GIll
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்ததிலிருந்து அதிகப்படியாக அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக இருப்பது கே.எல் ராகுலின் துவக்க வீரருக்கான இடம்தான். ஏனெனில் அண்மைக்காலமாகவே பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுல் இந்த டெஸ்ட் தொடரிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

KL-Rahul

- Advertisement -

ஆனால் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்து வெளியேறிய அவர் அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை பெற்றுள்ளார். நடைபெற்று வரும் இந்த தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல் ராகுல் வெறும் 38 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

அதோடு டெஸ்ட் அணியில் அவர் துணைக்கேப்டனாக இருப்பதினால் தான் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்ட வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களுக்கான அணியில் அவரது துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

Gill

இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே.எல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அற்புதமான பார்மில் இருக்கும் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது. மேலும் நாளை மார்ச் ஒன்றாம் தேதி இந்தூரில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரராக யார் இடம்பெற வேண்டும் என்று பெரிய விவாதமே சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ் பரத்திடம் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது 3 ஆவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் இடம்பெறுவாரா? அல்லது சுப்மன் கில் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கே எஸ் பரத் : இது “அணி நிர்வாகத்தின் முடிவு”, “தனிப்பட்ட முறையில் நான் எடுக்கக்கூடிய முடிவு கிடையாது அல்லவா” என்று சாமர்த்தியமான பதிலை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : இப்போ இருக்குற நிலைமைல ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு எதிரா இதை செய்ஞ்சாலே சாதனை தான் – மெக்ராத் ஓபன்டாக்

இதன் மூலம் அணி நிர்வாகம் யாரை தேர்ந்தெடுக்கிறதோ அவர் தான் விளையாடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரிஷப் பண்டிற்கு பதிலாக தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகி இரண்டு போட்டியில் விளையாடியுள்ள கே எஸ் பரத் பேட்டிங்கில் இன்னும் போதிய அளவு வாய்ப்பை பெறாவிட்டாலும் விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement