இப்போ இருக்குற நிலைமைல ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு எதிரா இதை செய்ஞ்சாலே சாதனை தான் – மெக்ராத் ஓபன்டாக்

Mcgrath
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை மார்ச் 1-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்னதாக பலவீனமாக இருக்கும் ஆஸ்திரேலியா அணி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இவ்வேளையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரரான கிளென் மெக்ராத்தே அந்த அணியை தற்போது விமர்சித்து பேசியிருப்பது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் கிளென் மெக்ராத் கூறியதாவது :

IND vs AUS Siraj SMith

பேட்டிங் வரிசையில் ஒவ்வொரு வீரரும் ரன்களை குவிக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகிய இருவரை மட்டுமே ஆஸ்திரேலிய நம்பி உள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் சுழற்பந்துவீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய வீரர்கள் உறுதியாக இல்லை என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அந்த அளவிற்கு அவர்கள் தடுமாறுகின்றனர். முதல் இரண்டு போட்டியில் தோற்றத்திலிருந்து அவர்கள் பாடத்தை கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இந்த தொடரில் இரண்டு ஆட்டத்தை இழந்த ஆஸ்திரேலிய அணியானது இந்த தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் தோல்வி அடையாமல் இருந்தாலே அதுவே ஒரு சாதனை தான் என்று நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : IND vs AUS : துணை கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்ட ராகுல் 3வது போட்டியில் வாய்ப்பு பெறுவாரா? ரோஹித் சர்மாவின் பதில் இதோ

ஏனெனில் தற்போதுள்ள சூழலில் ஆஸ்திரேலிய அணி நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் தோல்வியை சந்திக்கும். அப்படி ஒருவேளை அவர்கள் ஒரு போட்டியை டிரா செய்தால் கூட அதுவும் பெரிய சாதனைதான் என கிளென் மெக்ராத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement