IND vs AUS : துணை கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்ட ராகுல் 3வது போட்டியில் வாய்ப்பு பெறுவாரா? ரோஹித் சர்மாவின் பதில் இதோ

KL Rahul Dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது. இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை தெறிக்க விடும் இந்திய அணியில் சுமாராக செயல்படும் கேஎல் ராகுல் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருவது உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

KL-Rahul

- Advertisement -

கடந்த 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்த அவர் நாளடைவில் அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஏற்பட்ட விமர்சனங்களை சமாளிக்க முடியாத பிசிசிஐ ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய துணை கேப்டன்ஷிப் மற்றும் ஓப்பனிங் இடத்தை பறித்து மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை மட்டும் கொடுத்துள்ளது.

அந்த நிலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சுமாராகவே செயல்பட்டு வருவதால் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவியைப் பறித்து சாதாரண வீரராக விளையாடும் வாய்ப்பு கொடுத்துள்ளது. முன்னதாக துணைக் கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு பெற்று வந்த ராகுல் தற்போது அந்த பதவியை இழந்துள்ளதால் நிச்சயமாக 3வது போட்டியில் அவருக்கு பதில் சுப்மன் கில் விளையாடுவதை எதிர்பார்ப்பதாக ஹர்பஜன் சிங், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

Gill

ரோஹித் பதில்:
அதற்கேற்றார் போல் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கும் 3வது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியில் ராகுலுக்கு பின்புறத்தில் சுப்மன் கில் பயிற்சிகளை மேற்கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அதனால் நிச்சயமாக ராகுல் 3வது போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துணை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்காக ராகுல் விளையாடும் 11 பேர் அணியிலிருந்து நீக்கப்படுவதாக எந்த அர்த்தமும் இல்லை என்று கேப்டன் ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் கடந்த போட்டிகளில் சுப்மன் கில் பயிற்சி எடுக்காததாலேயே இப்போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சி செய்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி 3வது போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “இதைப் பற்றி கடந்த போட்டியிலேயே நான் பேசியுள்ளேன். அதாவது கடினமான சூழ்நிலைகளை கடக்கும் எந்த வீரராக இருந்தாலும் அவர்களது திறமைக்கு ஏற்ப அவர்களது திறமையை நிரூபிக்க போதிய நேரம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தேன்”

Rohit-Sharma

“எனவே துணை கேப்டனாக இருந்தாலும் இல்லையென்றாலும் அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. கடந்த போட்டியில் அவர் துணை கேப்டனாக இருந்தார். தற்போது அவர் துணை கேப்டன் பதவியை இழந்துள்ளது எந்த வித்தியாசமான முடிவையும் குறிப்பிடுவதாக அர்த்தமில்லை. மேலும் பெரும்பாலான போட்டிகளுக்கு முன்பாக ராகுல் மற்றும் கில் ஆகிய இருவருமே அவ்வாறு தான் பயிற்சி எடுப்பார்கள். அந்த வகையில் இன்று அனைத்து வீரர்களும் வழக்கமான பயிற்சி எடுத்தோம். அதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தெரிவித்திருந்தோம்”

இதையும் படிங்க: ஷேன் வார்னே போல, 50வது பிறந்த நாளில் வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு கொடுக்கப்பட உள்ள உயரிய கெளரவம்

“மேலும் விளையாடும் 11 பேர் அணியை பொறுத்த வரை அதை நான் உங்களுக்கு நாளை டாஸ் வீசும் போது தெரிவிப்பேன். ஏனெனில் கடைசி நேரத்தில் சில காயங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார். அதாவது துணை கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டுள்ளதற்காக விளையாடும் 11 பேர் அணியில் ராகுல் நீக்கப்பட மாட்டார் என்று ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார். கடந்த போட்டியிலேயே இதை அவர் தெரிவித்திருந்த நிலையில் வெளிநாடுகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய ராகுலுக்கு இந்த மோசமான தருணங்களில் தேவையான வாய்ப்பு கொடுப்போம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement