ஹேக் செய்யப்பட்ட இந்திய வீரரின் ட்விட்டர் கணக்கு. 10 தாறுமாறான பதிவு – வெளியாகி அதிர்ச்சி

Krunal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரரும் ஹர்திக் பாண்டியாவின் சகோதரருமான க்ருனால் பாண்டியா இந்தியா அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 அணியில் விளையாடியவர். அவர் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரராக விளையாடி வந்தார். இருப்பினும் ஐபிஎல் 2022 சீசனுக்காக அவரையும் அவரின் சகோதரரான ஹர்திக் பாண்டியாவையும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்காமல் விடுவித்துள்ளது.

Krunal

- Advertisement -

ஹேக் செய்யப்பட்ட க்ருனால் பாண்டியா :
இதில் ஹர்டிக் பாண்டியா அகமதாபாத் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் க்ருனால் பாண்டியா ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் அவரின் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான டுவிட்டர் கணக்கு இன்று காலை ஹேக்கர்களால் திடீரென ஹேக் செய்யப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை உண்டாக்கியது.

இதுவரை மொத்தம் 1.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடரும் அவரின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் வரிசையாக 10 தாறுமாறான ட்வீட்களை பதிவிட்டு பரபரப்பை உண்டாக்கினார்கள்.

பிட்காயின் வாங்குறீங்களா:
அதில் மிகவும் குறிப்பிடத்தக்க வண்ணமாக “பிட் காயின்களுக்காக இந்த ட்விட்டர் கணக்கு விற்கப்படுகிறது. வங்கி கணக்கின் முகவரியும் உடன் உள்ளது”… “எனக்கும் பிட் காயின்களை அனுப்புங்கள்” என்பது போன்ற பதிவுகளை பதிவிட்டு ஹேக்கர்கள் ரகளையில் ஈடுபட்டார்கள். அத்துடன் சில ரசிகர்களின் பெயரை “டேக்” செய்து அவர்களை திட்டும் வகையில் ஒரு சில பதிவுகளை ஹேக்கர்கள் பதிவிட்டதால் ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.

- Advertisement -

அதிர்ச்சியில் க்ருனால் பாண்டியா:
இதனால் அதிர்ச்சி அடைந்த க்ருனால் பாண்டியா பின்னர் இதுபற்றி டுவிட்டர் நிர்வாகத்திடம் புகார் செய்ததை அடுத்து அவரின் டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களிடமிருந்து மீட்டெடுக்கப்பட்டது. அத்துடன் ஹேக்கர்கள் பதிவிட்ட 10க்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை ட்விட்டர் நிர்வாகம் நீக்கி அவரின் கணக்கை பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்தது.

krunal

ட்விட்டர் கணக்குகள் இதுபோல ஹேக் செய்யப்படுவது புதிதல்ல. இதற்கு முன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஜோ பிடன், உலகப் பணக்காரர்களான பில் கேட்ஸ், எலன் மஸ்க் என உலகம் முதல் தமிழ்நாட்டில் உள்ள சில நட்சத்திரங்கள் வரை ஹேக்கர்கள் கை வைக்காத இடமே கிடையாது எனலாம்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகும் தகுதி இவங்க 2 பேர்கிட்ட இருக்கு – ஸ்டீவ் ஸ்மித் ஓபன்டாக்

கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் விளையாடிய க்ருனால் பாண்டியா அதன்பின் ஒருநாள் போட்டியில் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு விளையாடி இருந்தார். அந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக நேற்று அறிவிக்கபட்ட இந்திய அணியில் அவரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement